Actor Mohanlal: மோகன்லால் நடிப்பில் பிரிதிவிராஜ் இயக்கியுள்ள எம்புரான் திரைப்படம் மலையாள சினிமா மட்டுமின்றி, மற்ற மொழிகளிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
Actor Mohanlal: மோகன்லால் நடிப்பில் பிரிதிவிராஜ் இயக்கியுள்ள எம்புரான் திரைப்படம் மலையாள சினிமா மட்டுமின்றி, மற்ற மொழிகளிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
Published on: March 23, 2025 at 10:59 am
மலையாள சினிமா திரை உலகில் 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் லூசிபர். மோகன்லால் நடிப்பில், நடிகரும் இயக்குனருமான பிரித்விராஜ் சுகுமார் இப்படத்தை டைரக்ட் செய்திருந்தார். சுமார் 30 கோடியில் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படம் ரூபாய் 200 கோடிகள் வரை வசூல் சாதனை புரிந்ததாக அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் பிரித்திவிராஜ் செதுக்கி இருப்பார்.
அதிலும் கடவுளை போல காப்பவன் இவன் என்ற பாடல் தமிழ் மற்றும் மலையாளத்திலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தப் படத்தைப் பார்த்த ரஜினிகாந்த் அப்போதே மிகப்பெரிய பாராட்டுகளை தெரிவித்து இருந்தார். எனினும் சிலருக்கு அந்தப் படத்தின் லூசிபர் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் இருந்தது. இந்த வார்த்தை கிறிஸ்தவத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
இதையும் படிங்க: Exclusive:சின்னத்தம்பி பட நடிகர்; யார் இவர்? அடையாளம் தெரிகிறதா?
லூசிபர் என்றால் சாத்தான் என பொருள்படும். ஆனால் இந்த லூசிபர் தேவ தூதராக இருந்து தீமைக்கும் நன்மைக்கும் இடையே நடந்த போராட்டத்தில் நன்மையை வெற்றி பெறச் செய்தார். லூசிபர் படம் அரசியல் கதை களத்தைக் கொண்டது. போதைப் பொருள் மூலம் அளிக்கத் துடிக்கும் ஒரு தீமையை லூசிபராக தோன்றி அடித்து நொறுக்குவார் மோகன்லால்.
இந்தப் படத்தை பிரித்திவிராஜ் சுகுமாரன் இயக்கும்போதே இப்படம் 3 பாகமாக வெளிவரும் என்பதை கதை ஆசிரியர் மிகத் தெளிவாக கூறியிருந்தார். இந்த நிலையில் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமான எம்புரான் வெளியாக உள்ளது. இந்த நிலையில் முதல் பாகத்தில் லூசிபருக்கு என்ன அர்த்தம்? என்பது தொடர்பான ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
இதே ஆர்வம் படத்தின் இரண்டாம் பாகத்தின் பெயருக்கும் எழுந்துள்ளது. அந்த வகையில், எம்புரான் என்றால் அவர் மன்னனுக்கு மன்னன் அதே நேரம் கடவுளுக்கு கீழானவன் என பொருள் என்ற தகவலும் தற்போது வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: தொடர்ந்து ரேஸில் ஈடுபட ஆசை.. அப்போ சினிமா? அஜித் குமார் பரபரப்பு பேட்டி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com