Actress Samantha rejects Rs 200 crore alimony: நடிகை சமந்தா நாக சைதன்யா ஜோடி 2021ல் பிரிந்தனர். அப்போது சமந்தாவுக்கு ரூ. 200 கோடி ஜீவனாம்சம் வழங்க நாகசைதன்யா குடும்பம் முன்வந்தது. ஆனால் அதனை நிராகரித்தார் நடிகை சமந்தா.
Actress Samantha rejects Rs 200 crore alimony: நடிகை சமந்தா நாக சைதன்யா ஜோடி 2021ல் பிரிந்தனர். அப்போது சமந்தாவுக்கு ரூ. 200 கோடி ஜீவனாம்சம் வழங்க நாகசைதன்யா குடும்பம் முன்வந்தது. ஆனால் அதனை நிராகரித்தார் நடிகை சமந்தா.
Published on: March 23, 2025 at 7:58 pm
நடிகை சமந்தாவும், நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் நான்கு ஆண்டு திருமண வாழ்க்கை 2021 இல் நிறைவு பெற்றது. இருவரும் பேசி பரஸ்பர அனுமதி உடன் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிந்தனர். இவர்களின் திருமண பிரிவு ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இன்றளவும் பல்வேறு விதமாக பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நடிகர் நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். கணவனை பிரிந்த நாட்களில் நடிகை சமந்தா உடல் மற்றும் மன ரீதியாக பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தார். அவருக்கு மையோசிட்டிஸ் என்ற ஒரு அரிய வகை தோல்நோய் ஏற்பட்டது.
இந்த தோல் நோய்க்காக பல நாட்கள் நடிகை சமந்தா சிகிச்சை எடுத்துக் கொண்டார். அதன் பின்னர் அவர் வெப் சீரிஸ் மற்றும் படங்களில் தொடர்ந்து நடித்தார். எனினும் தற்போது அவர் உடற்பயிற்சி மற்றும் ஆன்மீகம் சார்ந்த நிகழ்வுகளில் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் நடிகை சமந்தா மீது மீண்டும் ஊடக வெளிச்சம் திரும்பி உள்ளது.
நாக சைதன்யாவை நடிகை சமந்தா பிரிந்த போது அவர் தனக்கு ஜீவனாம்சமாக எந்தத் தொகையும் வாங்கவில்லை என கூறப்படுகிறது. ₹200 கோடிகள் வரை நாகர்ஜுனா குடும்பத்திடமிருந்து ஆபர்கள் சென்றதாகவும், அதனை நடிகை சமந்தா நிராகரித்து விட்டார் என்றும் கூறப்படுகிறது.
அண்மையில், இந்திய கிரிக்கெட் சுழல் பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சகால், தனஸ்ரீ ஜோடி விவாகரத்து ஆனது. அப்போது, தனஸ்ரீக்கு ரூபாய் 4.75 கோடி ஜீவனாம்சமாக யுஸ்வேந்திர சகால் வழங்கினார். அதேபோல் நடிகர் கிருத்திக் ரோஷன் விவாகரத்தின்போது தனது மனைவி சூசனே கானுக்கு ₹380 கோடி ஜீவனாம்சமாக வழங்கினார் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க; அஜித் குமாரை இயக்குகிறாரா தனுஷ்? புதிய அப்டேட்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com