Avatar Future Update : அவதார் திரைப்படத்தின் அடுத்த பாகம் குறித்து இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் பதிலளித்துள்ளார்.
Avatar Future Update : அவதார் திரைப்படத்தின் அடுத்த பாகம் குறித்து இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் பதிலளித்துள்ளார்.
Published on: May 17, 2026 at 5:41 pm
நியூயார்க், மே 17, 2026: முதன்மை ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன், ‘அவதார்’ தொடரின் எதிர்காலம் குறித்து புதிய தகவலை வெளியிட்டுள்ளார். அதில், அவர் அவதார் 4 மற்றும் அவதார் 5 படங்களை, முந்தைய படங்களை விட பாதி நேரத்தில், மூன்றில் இரண்டு பங்கு செலவில் உருவாக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். இதற்கான தொழில்நுட்ப மாற்றங்களை கண்டறிய ஒரு வருடம் தேவைப்படும் எனவும் கூறியுள்ளார்.
தயாரிப்பு திட்டம்
இது குறித்து பேசிய அவர், அவதார் 4 மற்றும் 5 ஆகிய திரைப்படங்கள் இன்னும் தயாரிப்பில் உள்ளன; மேலும், டிஸ்னி வெளியீட்டு அட்டவணையில் இடம்பெற்றுள்ளன.
இது மட்டுமின்றி, சி.ஜி.ஐ மற்றும் வி.எஃப்.எக்ஸ் செலவுகளை குறைக்க புதிய முறைகள் ஆராயப்படுகின்றன” என்றார்.
முந்தைய படங்களின் செலவு
அவதார் : ஃபயர் அண்ட் ஆஷ் படத்தின் செலவு $400 மில்லியன் ஆகும்; இந்தப் படத்தின் வசூல் $1.48 பில்லியனாக உள்ளது. இந்த நிலையில் ஜேம்ஸ் கேமரூன் இவ்வாறு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : வசூலில் அரை சதம் அடித்த கருப்பு? சாதித்தாரா, சறுக்கினாரா சூர்யா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com