கங்கையில் அசைவ உணவுகளை எறியக் கூடாது.. அலகாபாத் உயர் நீதிமன்றம்!

Ganga Iftar Bail Order : கங்கை நதியில் அசைவ உணவுப் பொருள்களை தூக்கி எறியக் கூடாது என அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Published on: May 18, 2026 at 10:02 am

அலகாபாத், மே 18, 2026: அலகாபாத் உயர்நீதிமன்றம், கங்கை இப்தார் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 14 பேரில் 8 பேருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. மேலும், நீதிமன்றம், கங்கையில் அசைவ உணவு எறிவது இந்து மத உணர்வுகளை புண்படுத்தக்கூடும் எனக் குறிப்பிட்டதோடு, குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் உண்மையான வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.

வழக்கு பின்னணி

வராணாசியில் மார்ச் 15, 2026 அன்று, 14 இளைஞர்கள் கங்கை நதியில் படகில் இப்தார் விருந்து நடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. அந்தப் புகாரில், அவர்கள் சிக்கன் பிரியாணி போன்ற அசைவ உணவுகளை உண்டு, மீதிகளை கங்கையில் எறிந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இந்தப் புகாரை அளித்தவர் பாஜக யுவமோர்ச்சா தலைவர் ராஜத் ஜெய்ஸ்வால் ஆவார். அவர் தனது புகாரில் இது இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் செயல் எனக் கூறியிருந்தார்.

8 பேருக்கு ஜாமீன்

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராஜீவ் லோசன் ஷுக்லா மற்றும் நீதிபதி ஜிதேந்திர குமார் சின்ஹா ஆகியோர் தனித்தனி உத்தரவுகளில் 8 பேருக்கு ஜாமீன் வழங்கினர். அப்போது, நீதிமன்றம், “சிலரின் செயலால் மத நல்லிணக்கம் பாதிக்கப்படலாம்” என எச்சரித்திருந்தது. இந்த வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் “சமூகத்திற்கு ஏற்பட்ட துயரத்திற்கு வருந்துகிறோம்” என சத்தியப்பிரமாணத்தில் தெரிவித்தனர்.

என்னென்ன பிரிவுகளில் வழக்கு?

குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது பாரதிய நியாய சன்ஹிதா (பி.என்.எஸ்) சட்டப் பிரிவுகள் 196 (எதிர்மறை உணர்வுகளை தூண்டுதல்), 298 (பூஜை இடத்தை அவமதித்தல்), 299 (மத உணர்வுகளை புண்படுத்தும் தீங்கான செயல்), 270 (பொது தொந்தரவு), 279 (நீர் மாசுபடுத்தல்) உள்ளிட்ட பிரிவுகள் பதிவு செய்யப்பட்டன.
கூடுதலாக, நீர் மாசுபாடு தடுப்பு சட்டம், 1974 பிரிவு 24 மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 67 ஆகியவை சேர்க்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : அந்தமானில் நிலநடுக்கம்.. 5.3 ஹெக்டர் அளவுகோலில் பதிவு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com