Madarasi release date: நடிகர் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் 2025 செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Madarasi release date: நடிகர் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் 2025 செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Published on: April 16, 2025 at 2:13 pm
அடுத்ததாக ஆக்ஷன் த்ரில்லர் படமான மதராசியில் நடிக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்தப் படத்தில், சாண்டல்வுட் அழகி ருக்மிணி கதாநாயகியாக நடிக்கிறார்.
இதற்கிடையில், செப்டம்பர் 5, 2025 அன்று மதராசி வெளியாகும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில், சிவகார்த்திகேயனின் வசீகரிக்கும் போஸ்டருடன் வெளியீட்டுத் தேதியை தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர். அதன்படி, படம் 2025 செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகிறது.
இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸின் கடைசி படமான சிக்கந்தர் படம் தோல்வியடைந்ததால், அனைவரின் பார்வையும் சிவகார்த்திகேயன் நடிக்கும் இந்தப் படத்தின் மீது உள்ளது. இந்தப் படத்தின், இறுதிப் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு, முழு அளவிலான விளம்பரப் பணிகள் தொடங்கும்.
துப்பாக்கி படத்துக்குப் பிறகு முருகதாஸுடன் நடிகர் வித்யுத் ஜம்வால் இணைந்து பணியாற்றும் இரண்டாவது படம் இதுவாகும். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஸ்ரீ லட்சுமி மூவிஸ் பேனரின் கீழ் ஸ்ரீலட்சுமி பிரசாத் மதராசி படத்தை தயாரிக்கிறார்.
இதையும் படிங்க : சர்ப்ரைஸ் விசிட் அடித்த சிவகார்த்திகேயன்.. கன்னத்தில் முத்தமிட்ட சூரி..!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com