Namma Uru Namma Suvai show | புதுயுகம் தொலைக்காட்சியில் “நம்ம ஊரு நம்ம சுவை” என்ற புதுமையான நிகழ்ச்சி தொடங்கி உள்ளது.
Namma Uru Namma Suvai show | புதுயுகம் தொலைக்காட்சியில் “நம்ம ஊரு நம்ம சுவை” என்ற புதுமையான நிகழ்ச்சி தொடங்கி உள்ளது.
Published on: November 13, 2024 at 6:58 pm
Namma Uru Namma Suvai show | சமையல் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு மக்களிடையே உள்ள சிறந்த வரவேற்பை தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள சமையல் கலைஞர்களின் ஆர்வத்தை கருத்தில் கொண்டு மாவட்டம் தோறும் சென்று அங்கு சமையல் சார்ந்த போட்டிகளை நடத்தி அதில் வெற்றி பெறும் சமையல் கலைஞர்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக “நம்ம ஊரு நம்ம சுவை” நிகழ்ச்சி முதற்கட்டமாக சேலத்தில் சென்னிஸ் கேட்வே ஹோட்டலில் நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் பங்கு பெற்று தாங்கள் சமைத்துக் கொண்டு வந்த உணவுகளுடன் தங்களின் திறமைகளை காட்டினர். அதில் சிறந்த 10 கலைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இறுதிப் போட்டி நடைபெற்று அதில் 3 நபர்களை தேர்ந்தெடுத்து அதில் ஒருவரை தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்பட்டது.
இதில் சமையல் கலைஞர்கள் மட்டும் இல்லாமல் சேலத்து மக்கள் அனைவரும் திரளாக வந்து கலந்து கொண்டு சமையல் போட்டியை சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சியில் சேலத்தை சேர்ந்த பிரபல செஃப்கள் கலந்து கொண்டு போட்டியாளர்களை தேர்வு செய்தனர். இதனை தொகுப்பாளர்கள் மெர்சி மற்றும் ஹரி தொகுத்து வழங்கினர். “நம்ம ஊரு நம்ம சுவை” நிகழ்ச்சி வரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 11:00 மணிக்கு நமது புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.
இதையும் படிங்க : 90-ஸ் கிட்ஸ் ஃபேவரிட் ஷோ; ‘சக்திமான் 2’ ஒளிபரப்பு எப்போது?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com