Actress Neelima Rani : திருமண வாழ்க்கையில் வயது வித்தியாசம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் நடிகை நீலிமா ராணி.
Actress Neelima Rani : திருமண வாழ்க்கையில் வயது வித்தியாசம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் நடிகை நீலிமா ராணி.

Published on: April 19, 2026 at 12:20 pm
சென்னை, ஏப்.19, 2026: திருமண வாழ்க்கையில் வயது வித்தியாசம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் பெரிய மற்றும் சின்னத்திரையில் கோலோச்சும் நடிகை நீலிமா ராணி.
சின்னத்திரை மட்டுமின்றி பெரியத் திரையிலும் நடிகை நீலிமாக ராணிக்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. இந்த நிலையில், நீலிமா ராணி தனது திருமண வாழ்க்கை குறித்தும் இருவருக்குள்ளான வயது வித்தியாசம் குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், திருமண வாழ்க்கையில் ஒருவர் பெரியவராகவும், ஒருவர் முதிர்ச்சியற்றவராகவும் இருப்பதில் தவறில்லை; இந்த வயது வித்தியாசம் புரிதலை உண்டாக்கும்” என்றார்.
மேலும், நீலிமா ராணி, தம்பதிகளுக்கு இடையே கண்டிப்பாக வயது வித்தியாசம் இருக்க வேண்டும். இருவரும் ஒரே வயதில் இருந்தால் அது வாழ்க்கையில் தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்கும்.ஒருவர் முதிர்ச்சியோடும் (Matured), மற்றொருவர் கொஞ்சம் விளையாட்டுத்தனமாகவும் இருக்க வேண்டும். ஒருவர் பெரியவராகவும், மற்றொருவர் சிறியவராகவும் இருக்கும்போதுதான் புரிதல் நன்றாக இருக்கும் என்றார்.
இதையும் படிங்க : தந்தை-மகன் அழகிய உறவு கதை.. அஷகல் ஆயிரம் ஒ.டி.டி ரிலீஸ்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com