Uber Cup Badminton : உபர் கோப்பை பேட்மிண்டன் தொடரில் இந்திய மகளிர் அணி வெளியேறியது.
Uber Cup Badminton : உபர் கோப்பை பேட்மிண்டன் தொடரில் இந்திய மகளிர் அணி வெளியேறியது.

Published on: April 29, 2026 at 5:49 pm
ஹோர்சென்ஸ், ஏப் 29 2026: டென்மார்க்கின் ஹோர்சென்ஸ் நகரில் பெண்களுக்கான உபர் கோப்பை பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது.
இதில் பெண்கள் பிரிவில் 16 அணிகள் இடம் பெற்ற நிலையில், ஏ பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சீனாவை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 0-5 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.
இந்த போட்டியில் பி.வி. சிந்து, வாங் ஜீயியுடன் கடுமையாக போராடினாலும் வெற்றியைப் பெற முடியவில்லை. மற்ற ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளிலும் இந்திய வீராங்கனைகள் பின்னடைவை சந்தித்தனர்.
முன்னதாக டென்மார்க்கிடம் 2-3 என தோல்வியடைந்த இந்திய அணி, உக்ரைனை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஆனால் சீனாவுக்கு எதிரான இந்த தோல்வியால் இந்திய அணி லீக் ஆட்டத்திலேயே வெளியேறியது.
குழு ‘ஏ’ பிரிவில் சீனா மற்றும் டென்மார்க் அணிகள் காலிறுதிக்கு முன்னேறின. இந்திய அணி ஒரு வெற்றி, இரண்டு தோல்விகளுடன் காலிறுதி வாய்ப்பை இழந்தது.
இதையும் படிங்க : காமன்வெல்த் இளைஞர் பளுதூக்குதல்.. 4 தங்கம் வென்று இந்திய வீரர்கள் அசத்தல்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com