Liquor Shops Shut on May 1 : மே தினத்தை முன்னிட்டு வருகிற மே 1-ம் தேதி திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் மதுபானக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
Liquor Shops Shut on May 1 : மே தினத்தை முன்னிட்டு வருகிற மே 1-ம் தேதி திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் மதுபானக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Published on: April 29, 2026 at 6:16 pm
திருநெல்வேலி, ஏப். 29 2026: மே தினத்தை முன்னிட்டு வருகிற மே 1-ம் தேதி திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் மதுபானக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் சுகுமார் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அரசாணைகள் மற்றும் சென்னை மதுவிலக்கு மற்றும் ஆயத்துறை ஆணையரின் வழிகாட்டுதலின்படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் டாஸ்மாக் நடத்தும் அனைத்து மதுபானக் கடைகள் (FL1 உரிமம்), அவற்றுடன் இணைந்த பார்கள், தங்கும் விடுதிகளுடன் இணைந்த FL2, FL3, FL3A, FL3AA மற்றும் FL11 உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் அனைத்தும் மே 1-ம் தேதி கட்டாயமாக மூடப்பட வேண்டும்.
விதிகளை மீறி மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட கலெக்டர் சுகுமார் எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க : தமிழ்நாட்டில் தொங்கு சட்டமன்றம் என சொல்லவில்லை.. தொல். திருமாவளவன்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com