டாஸ்மாக் முறைகேடு வழக்கு… செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

Anticipatory Bail: டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி உள்ளிட்ட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது.

Published on: July 30, 2026 at 3:37 pm

சென்னை, ஜூலை 30 2026: டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) பதிவு செய்துள்ள வழக்கில், முன்னாள் அமைச்சர் மற்றும் திமுக எம்.எல்.ஏ. வி. செந்தில் பாலாஜி, சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

மனுவில், தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள செந்தில் பாலாஜி, அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கில் தன்னை தொடர்புபடுத்தியுள்ளதாகவும், விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கைது செய்யாமல் விசாரணைக்கு உட்படுத்த நீதிமன்றம் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

இதற்கிடையில், டாஸ்மாக் முறைகேடு வழக்கில் செந்தில் பாலாஜி உள்ளிட்ட 7 பேர் மீது டிவிஏசி வழக்குப்பதிவு செய்ததையடுத்து, தமிழகம் முழுவதும் பல இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. டாஸ்மாக் பார் உரிமம், போக்குவரத்து ஒப்பந்தங்கள், கொள்முதல் நடைமுறைகள் உள்ளிட்டவற்றில் முறைகேடுகள் நடைபெற்றதாக விசாரணை அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

முன்ஜாமீன் மனு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்ற நிலையில் இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ஜி.கே. இளந்திரையன், “டாஸ்மாக் முறைகேடு நடந்ததற்கும் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதற்கும் ஆதாரங்கள் உள்ளன. குற்றம்சாட்டப்பட்டவர் அதிகார துஷ்பிரயோகம் செய்ததற்கான முகாந்திரம் இருக்கிறது. எனவே செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அவசியம் உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்து நீதிபதி செந்தில் பாலாஜியின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார்.

இதனால், செந்தில் பாலாஜியை தமிழக ஊழல் தடுப்பு- கண்காணிப்புத் துறை விரைவில் கைது செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை.. செந்தில் பாலாஜி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com