Chennai | மருத்துவரை கத்தியால் குத்திய இளைஞர் மீது கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டுள்ளது
Chennai | மருத்துவரை கத்தியால் குத்திய இளைஞர் மீது கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டுள்ளது
Published on: November 13, 2024 at 7:09 pm
Updated on: November 13, 2024 at 7:10 pm
Chennai | சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் பணிபுரியும், மருத்துவர் பாலாஜி இளைஞர் ஒருவரால் கத்தியால் குத்தப்பட்டார். தனது தாயாருக்கு உரிய சிகிச்சை அளிக்காததால் கத்தியால் குத்தியதாக கைதான இளைஞர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.
அரசு மருத்துவரை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் தமிழ்நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள், இந்த சம்பவத்தை கண்டித்ததுடன் மருத்துவர்களின் பாதுகாப்பை திமுக அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
இந்த நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதியின் காரை மரித்தும் சிலர்போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து பேசிய உதயநிதி, ” மருத்துவர்களின் பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம்; மருத்துவர்களின் பாதுகாப்பை திமுக அரசு உறுதி செய்யும். மருத்துவர்களை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமையாகும்” என தெரிவித்தார்.
இதற்கிடையில் மருத்துவரை கத்தியால் குத்திய இளைஞர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவரை கத்தியால் குத்திய இளைஞரை அப்பகுதியில் இருந்தவர்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு ; வானிலை ஆய்வு மையம் தகவல்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com