O Romeo Film: மும்பையில் வெளியாகவிருக்கும் இந்தி திரைப்படமான ‘ ஓ ரோமியோ (O Romeo)’ சட்ட சிக்கலை எதிர்கொள்கிறது.
சும்மா.. கெத்தா ஸ்டைலா.. காரைக்குடியில் மம்முட்டி!
Mammootty: மம்முட்டி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு, காரைக்குடியில் நடக்கிறது….
O Romeo Film: மும்பையில் வெளியாகவிருக்கும் இந்தி திரைப்படமான ‘ ஓ ரோமியோ (O Romeo)’ சட்ட சிக்கலை எதிர்கொள்கிறது.

Published on: February 3, 2026 at 2:08 pm
மும்பை, பிப்.3, 2026: பிரபல பத்திரிகையாளரும், போலீஸ் ‘என்கவுண்டர்’ இன்ஃபார்மருமான ஹுசைன் ஷேக் (அலியாஸ் ஹுசைன் உஸ்தாரா) என்பவரின் மகள் சனோபர் ஷேக்,
இவர், ஓ ரோமியோ திரைப்படம் தந்தையின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட பயோபிக் என குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், படத்தில் அவரது தனிப்பட்ட உரிமைகளை மீறி அவதூறு செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டி மும்பை நகர சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு, சஜித் நடியாட்வாலா மற்றும் படக்குழுவினருக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 13ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் திரையரங்கு, தொலைக்காட்சி மற்றும் ஒ.டி.டி வெளியீட்டை தடை செய்ய வேண்டும்” என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும், இந்தப் படமும் படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டதாக விளம்பரப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், ஹுசைன் ஷேக் அவர்களின் பெயர், புகழ், வாழ்க்கை வரலாறு ஆகியவை குடும்பத்தின் அனுமதி இல்லாமல் பயன்படுத்தப்பட்டுள்ளன என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
தொடர்ந்து, அவதூறு மற்றும் சமூக அவமதிப்பு ஏற்படுத்தும் வகையில் காட்சிகள் உள்ளன எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், வழக்கு பிப்ரவரி 6 அன்று மும்பை சிவில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஸ்பானிஷ் மொழி ஆல்பத்துக்கு முதல் முறை விருது.. 2026 கிராமி விருதுகள்.. முமு விவரம்!
Mammootty: மம்முட்டி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு, காரைக்குடியில் நடக்கிறது….
Dhruv Vikram: நடிகர் துருவ் விக்ரம் படத்துக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் சிவன் இசையமைக்கவுள்ளார்….
Once More: ‘ஒன்ஸ் மோர்’ ஆகஸ்ட் 28 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி சங்கர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்….
Kajol: 52வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் நடிகை கஜோல். ஆடம்பரமான கொண்டாட்டங்களை விட குடும்பத்தினருடன் செலவிடும் நேரம்தான் சிறந்தது என்கிறார்….
AK64 Titled Dare Devil: நடிகர் அஜித் குமார் நடிக்கும் 64-வது திரைப்படத்திற்கு ‘Dare Devil’ என அதிகாரப்பூர்வமாக பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது….
Kochadaiiyaan AI Re-release : ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் திரைப்படத்தின் AI தொழில்நுட்பத்தில் மேம்படுத்தப்பட்ட பதிப்பை மீண்டும் வெளியிடத் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. 2014…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com