துரந்தர்-2 ஒ.டி.டி.க்கு வந்தாச்சு.. எந்த தளத்தில், எப்போது பார்க்கலாம்?

Ranveer Singh’s Dhurandhar Hits JioHotstar : ரன்வீர் சிங் நடித்த ‘துரந்தர் தி ரிவெஞ்ச்’ திரைப்படம், நெட்ஃபிலிக்ஸில் அமெரிக்காவில் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து, ஜூன் 4 அன்று ஜியோஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.

Published on: May 16, 2026 at 12:41 pm

மும்பை, மே 16, 2026: ரன்வீர் சிங் நடித்த துரந்தர்: த ரிவெஞ்ச் படம் ஜூன் 4, 2026 அன்று ஜியோஹாட்ஸ்டாரில் டிஜிட்டல் பிரிமியர் ஆகிறது. இது மே 15 அன்று அமெரிக்காவில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியானதற்கு சுமார் ஒரு மாதம் கழித்து இந்தியாவில் வெளியாகிறது. துரந்தர்-2 திரைப்படத்தில் ரன்வீர் சிங், ஆர். மாதவன், அர்ஜுன் ராம்பால், சஞ்சய் தத் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், சாரா அர்ஜுன், ராகேஷ் பேடி உள்ளிட்ட பலர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.

ஆதித்யா தாரின் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தை ஜியோ ஸ்டூடியோஸ் மற்றும் B62 ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளன. துரந்தர்: த ரிவெஞ்ச் மார்ச் 19, 2026 அன்று திரையரங்கில் வெளியானது.
இந்தப் படம் இந்தியாவில் மட்டும் ரூ.1144 கோடி வசூல் செய்து, அனைத்துக் காலங்களிலும் அதிக வசூல் செய்த ஹிந்தி படம் என்ற பட்டியலில் இணைந்துள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் ஒ.டி.டி. (OTT) உரிமையை ஜியோஹாட்ஸ்டார் ரூ.150 கோடிக்கு பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : விஜய், ‘என் அன்பான நண்பர்’.. நடிகை மாளவிகா மோகனன்!

மீண்டும் புராணக் கதை.. பரபரக்கும் பாலிவுட்.. கடவுள் அவதாரம் எடுக்கும் ரன்வீர் சிங்? கதாபாத்திரம் தெரியுமா?
Ranveer Singh to Play Lord Shiva

மீண்டும் புராணக் கதை.. பரபரக்கும் பாலிவுட்.. கடவுள் அவதாரம் எடுக்கும் ரன்வீர் சிங்?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com