விஜய், ‘என் அன்பான நண்பர்’.. நடிகை மாளவிகா மோகனன்!

Malavika Praises Vijay : விஜய் எனது அன்பான நண்பர் என நடிகை மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்.

Published on: May 16, 2026 at 12:16 pm

சென்னை, மே 16, 2026: நடிகை மாளவிகா மோகனன், நடிகரும் தமிழ்நாடு முதலமைச்சருமான விஜயை ‘அன்பான நண்பர்’ என அழைத்தார். மேலும், “அவரை நேரடியாக அழைக்கலாம், அணுகலாம் — யாரும் அப்படி எளிமையாக இருக்க மாட்டார்கள்” என்றும் கூறியுள்ளார். தொடர்ந்து, அவர் விஜயின் ஒழுக்கம், நேர்த்தி, பணிவைவும் பாராட்டியுள்ளார்.

முதல் சந்திப்பு

நடிகை மாளவிகா மோகனன் மாஸ்டர் படப்பிடிப்பு போது விஜயை முதன்முதலில் சந்தித்தார். அப்போது, கடினமான காட்சியை படமாக்கும் போது, அவர் முழுமையாக தனது வசனங்களில் கவனம் செலுத்தினார் என மாளவிகா கூறியுள்ளார். மேலும், “விஜய் அமைதியாகவும், ஒழுக்கமாகவும், கவனமாகவும் இருந்தார்; அந்த சந்திப்புக்குப் பிறகு இருவரும் நண்பர்களானோம்” என்றார்.

இதற்கிடையில் விஜயின் ஒழுக்கம் குறித்து பேசிய மாளவிகா, ““காலை 7 மணிக்கு படப்பிடிப்பு என்றால், 6.55 மணிக்கே செட்-இல் இருப்பார். எந்த தாமதமும் இருக்காது; தயாரிப்பு செலவையும் வீணாக்க மாட்டார்” என்றார்.

மாளவிகா விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார்; அதன் பின்னர், பிரபாஸ் உடன் ராஜா சாப் படத்தில் நடித்திருந்தார். தற்போது கார்த்தியின் சர்தார்-2 திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : விஜய் பற்றி கேட்ட ரசிகர்.. வெட்கத்துடன் பதிலளித்த திரிஷா!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com