PPF Returns by 40, 50, 60 : மத்திய அரசின் ஆதரவு பெற்ற பி.பி.எஃப் திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.1.50 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு ரிட்டன் கிடைக்கும்?
PPF Returns by 40, 50, 60 : மத்திய அரசின் ஆதரவு பெற்ற பி.பி.எஃப் திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.1.50 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு ரிட்டன் கிடைக்கும்?

Published on: May 16, 2026 at 11:45 am
சென்னை, மே 16, 2026: ஒரு வருடத்திற்கு ₹1.5 லட்சம் பி.பி.எஃப் திட்ட கணக்கில் 25 வயதில் முதலீடு செய்தால், 7.1% வட்டி விகிதத்தில் 40, 50, 60 வயதில் பெரும் தொகை கிடைக்கும். அதாவது, 15 ஆண்டுகளில் சுமார் ₹40.7 லட்சம், 25 ஆண்டுகளில் ₹76 லட்சம், 35 ஆண்டுகளில் ₹1.3 கோடி வரை பெறலாம்.
40 வயதில் (15 ஆண்டுகள் முதலீடு)
மொத்த முதலீடு ₹22,50,000 ஆக இருக்கும்; இதில், வட்டி வருமானம் ₹18,18,209 கிடைக்கும். இதன் மொத்த மதிப்பு, ₹40,68,209 ஆகும்.
50 வயதில் (25 ஆண்டுகள் முதலீடு)
இதில் மொத்த முதலீடு ₹37,50,000 ஆக இருக்கும். இதில் சுமார் ₹38,50,000 வட்டி வருவாய் கிடைக்கும். இதன் மொத்த மதிப்பு ₹76,00,000 ஆகும். இதில், 15 ஆண்டுகள் முடிந்தபின், 5 ஆண்டுகளாக நீட்டிக்கலாம்; இதனால் கூட்டு வட்டி அதிகரிக்கும்.
60 வயதில் (35 ஆண்டுகள் முதலீடு)
மொத்த முதலீடு ₹52,50,000 ஆகவும், வட்டி வருமானம் சுமார் ₹77,50,000 ஆகவும் , இதனால் மொத்த மதிப்பு ₹1,30,00,000 ஆகவும் காணப்படும். பி.பி.எஃப் வட்டி விகிதம் தற்போது 7.1% (2025-26) ஆக காணப்படுகின்றது. இந்தத் திட்டத்தில், வரி சலுகை வருமான வரிச்சட்டம் 80C-இல் ₹1.5 லட்சம் வரை கழிவு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : எகிறிய கச்சா எண்ணெய், சரிந்த இந்திய ரூபாய் மதிப்பு.. என்ன காரணம்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com