ஆர்.பி.ஐ.-யின் ‘ஷாடோ வங்கி’ விதிகள்.. நோயல் டாடா எதிர்ப்பு ஏன்?

TATA Sons: டாடா சன்ஸ் வாரியக் கூட்டம் மே 8, 2026 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published on: May 8, 2026 at 12:32 pm

புதுடெல்லி, மே 8, 2026: டாடா சன்ஸ் மே 8ம் தேதி நடைபெறவுள்ள போர்டு கூட்டத்தில், நிறுவனத்தை பங்குச் சந்தையில் பட்டியலிட வேண்டுமா என்ற விவகாரம் முக்கியமாக பேசப்பட உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, இந்த விவகாரத்தில் டாடா டிரஸ்ட் உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது; இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய ‘ஷாடோ வங்கி’ விதிகள் காரணமாக பட்டியலிடல் கட்டாயமாகும் அபாயம் அதிகரித்துள்ளது.

இதில் நோயல் டாடா (டாடா டிரஸ்டி தலைவர்) பட்டியலிடலை எதிர்க்கிறார்; அதற்கு அவர் கூறும் காரணம், டிரஸ்ட் கட்டுப்பாடு குறையக்கூடும் என்பதே ஆகும்.மேலும், வேணு ஸ்ரீனிவாசன் மற்றும் விஜய் சிங் போன்ற உறுப்பினர்கள் முதல் பங்கு வெளியீடுக்கு (ஐ.பி.ஓ) ஆதரவாக உள்ளனர்; அவர்கள், பட்டியலிடல் மூலம் தெளிவுத்தன்மை, நிதி ஒழுங்கு, நல்ல நிர்வாகம் கிடைக்கும் என வலியுறுத்துகின்றனர்.

புதிய விதிகள் என்ன?

ஜூலை 1, 2026 முதல் அமலுக்கு வரும் இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளின்படி, டாடா சன்ஸ் ‘ஷாடோ வங்கி’ என வகைப்படுத்தப்படும். இதனால், பங்குச் சந்தையில் பட்டியலிடல் கட்டாயம் ஆகும்.இதற்கிடையில், மகாராஷ்டிரா பப்ளிக் டிரஸ்ட் சட்டம் தொடர்பான வழக்குகள், டிரஸ்ட் உறுப்பினர்களின் பதவி நீட்டிப்பு, வாக்கெடுப்பு முறைகள் ஆகியவை கூடுதல் சிக்கல்களை உருவாக்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : எம்.ஆர்.எஃப் Q4 லாபம் 38% உயர்வு; விலையேற்றம் தொடரும்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com