Gold Rate today in Chennai | சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 680 அதிகரித்து விற்பனையாகிறது.
Gold Rate today in Chennai | சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 680 அதிகரித்து விற்பனையாகிறது.
Published on: November 8, 2024 at 10:22 am
Gold Rate today in Chennai | சர்வதேச சந்தை நிலவரங்கள் காரணமாக தங்கம் விலையில் அதிரடி மாற்றம் ஏற்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, தீபாவளி பண்டிகையையொட்டி தங்கம் விலை ரூ. 60 ஆயிரத்தை நெருங்கியது. இது நகை பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக தங்கம் விலை தொடர்நது சரிவை சந்தித்து. இது சற்று ஆறுதலை தரும் வகையில் இருந்த நிலையில், இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 680 உயர்ந்துள்ளது.
சென்னையில் தங்கம் நேற்று கிராம் ரூ.7,200 க்கும், பவுன் ரூ. 57,600 க்கும் விற்பனையானது. இந்நிலையில், இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ. 85 உயர்ந்து கிராம் ரூ. 7,285 ஆகவும் பவுன் ரூ. 58,280 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தூய தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ. 7,790 ஆகவும் பவுன் ரூ. 62,320ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெள்ளி விலை
வெள்ளி விலையை பொருத்தவரை நேற்று கிராம் ரூ.102-க்கும் கிலோ வெள்ளி ரூ.102,000-க்கும் விற்பனையானது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 1 அதிகரித்து கிராம் ரூ.103 ஆகவும் கிலோ வெள்ளி ரூ.103,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க
FIR against Arvind Kejriwal: டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் யமுனை நதி குறித்த விமர்சனத்துக்கு எதிராக ஹரியானாவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லி சட்டமன்ற தேர்தல் 2025
டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (பிப். 5, 2025) நடக்கிறது. அனைத்துக் கட்சிகளின் பிரச்சாரமும் நேற்றுடன் முடிவடைந்துள்ளது.இங்கு, ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி இடையே டெல்லி மும்முனைப் போட்டியைக் காண உள்ளது.
இந்நிலையில், நாளை (பிப்ரவரி 5 ஆம் தேதி) 13,766 வாக்குச் சாவடிகளில் 1.56 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். அவர்களில், 83.76 லட்சம் ஆண்கள், 72.36 லட்சம் பெண்கள், 1,267 பேர் மூன்றாம் பாலின வாக்காளர்கள் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்தத் தேர்தலின் போது பாதுகாப்பு மற்றும் நியாயமான வாக்களிப்பு நடைமுறைகளை உறுதி செய்வதற்காக 220 துணை ராணுவப் படைகள், 19,000 ஊர்க்காவல் படையினர் மற்றும் 35,626 டெல்லி காவல்துறையினர் பணியில் உள்ளனர். இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 8 ஆம் தேதி எண்ணப்பட உள்ளன.
அரவிந்த் கெஜ்ரிவால் மீது வழக்குப்பதிவு
இந்நிலையில், ஹரியானாவின் குருக்ஷேத்திரத்தில் உள்ள ஷாஹாபாத் காவல் நிலையத்தில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் மீது பாரதிய நியாய சன்ஹிதா (பி.என்.எஸ்)வின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
யமுனை நதி நீர் தொடர்பான அவரது அறிக்கைகள் மற்றும் ஹரியானா அரசுக்கு எதிரான அவரது குற்றச்சாட்டுகள் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பா.ஜ.க புகார்
இதற்கிடையில், பாரதிய ஜனதா கட்சியின் ஒரு குழு தேசிய தலைநகரில் உள்ள தலைமைத் தேர்தல் அதிகாரியின் அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
யமுனை நதி குறித்து கெஜ்ரிவால்..
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலின் யமுனை நதி குறித்த பேச்சு பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்தப் பேச்சுகள் தேர்தல் களத்தில் முக்கிய பங்காற்றின. அரவிந்த் கெஜ்ரிவால், யமுனை நதி விஷமாக மாறிவிட்டது எனப் பேசி இருந்தார்.
அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்தப் பேச்சுக்கு காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தன. அரவிந்த் கெஜ்ரிவாலின் பேச்சில் உண்மை இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக அவர் அரசியலுக்காக பேசுகிறார் என்றால் அவர் இதுபோன்று பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்திருந்தது.
மறுபுறம், பா.ஜ.க இந்த விவகாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் அரசியல் செய்கிறார். அவர், ஹரியானா மற்றும் டெல்லி மக்கள் இடையே பகைமையை தூண்டுகிறார் எனக் குற்றஞ்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
கேரள லாட்டரி குலுக்கல்: கேரள லாட்டரி அக்ஷயா AK-687 குலுக்கல் இன்று (பிப். 02, 2025) மாலை 3 மணிக்கு கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள லாட்டரி பவனில் நடைபெறும்.
இந்தக் குலுக்கலில் முதல் பரிசு ரூ.70 லட்சம் ஆகும். இதுதவிர பல்வேறு ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட உள்ளன. குலுக்கலில் பரிசு பெற்றவர்கள் 30 நாள்களுக்குள் தங்களது அசல் பரிசு சீட்டை ஒப்படைக்க வேண்டும்.
பரிசு விவரம்
முதல் பரிசு: ரூ 70 லட்சம்
2வது பரிசு: ரூ. 5 லட்சம்
3வது பரிசு: ரூ. 1 லட்சம்
4வது பரிசு: ரூ 5000
5வது பரிசு: ரூ 2000
6வது பரிசு: ரூ 1000
7வது பரிசு: ரூ 500
8வது பரிசு: ரூ 100
ஆறுதல் பரிசு: ரூ.8,000
லாட்டரி முடிவுகளை காண..
கேரள லாட்டரி முடிவுகளை keralalottery.info மற்றும் keralalotteryresult.net ஆகிய இணையதள முகவரிகள் வழியாக பார்வையிடலாம். குலுக்கலில் பரிசு பெற்றவர்கள் பான் கார்டை சமர்பிக்க வேண்டும். மேலும், ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு ஆகியவையும் ஆவணங்களாக எடுத்துக்கொள்ளப்படும்.
முடிவுகள் வெளியான 30 நாட்களுக்குள், வெற்றியாளர், திருவனந்தபுரத்தில் உள்ள கேரள லாட்டரி தலைமையகத்தில் பரிசைப் பெற வேண்டும். தாமதித்தால் பரிசு பெறுவதில் சிக்கல்கள் ஏற்படும் என லாட்டரி நிர்வாகத்தின் சட்டப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
(Disclaimer : லாட்டரி விளையாட்டுகள் நிதி அபாயத்தை ஏற்படுத்தலாம். இதில் முதலீடு செய்வதற்கு முன் லாட்டரி விதிமுறைகளை கவனமாக படிக்கவும். திராவிடன் டைம்ஸ் லாட்டரி விற்பனையை எவ்விதத்திலும் ஊக்குவிக்கவில்லை. தகவலுக்காக மட்டுமே இந்தச் செய்தி எழுதப்பட்டுள்ளது)
இதையும் படிங்க வரி சலுகை, 10 ஆண்டுகளில் பெஸ்ட் ரிட்டன்.. டாப் 5 இ.எல்.எஸ்.எஸ் மியூச்சுவல் ஃபண்ட்கள் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
நடிகர் அஜித்குமாரின் கலைத்துறை மற்றும் பல்வேறு சாதனைகளை கௌரவிக்கும் விதமாக மத்திய அரசு அவருக்கு பத்மபூஷன் விருதை வழங்கி உள்ளது. இந்த நிலையில் நடிகர் அஜித்குமாருக்கு பாராட்டு விழா எடுக்க வேண்டும் என நகைச்சுவை நடிகர் யோகி பாபு தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நட்சத்திரமாக விளங்கும் யோகி பாபு இது குறித்து பேசுகையில், ” எவ்வளவு பெரிய சாதனை; அஜித் குமார் சாருக்கு பாராட்டு விழா எடுக்க வேண்டும். அவரை அனைவரும் பாராட்ட வேண்டும்” என்றார்.
நடிகர் யோகி பாபு தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக தற்போது வலம் வந்து வருகிறார். இவர், ரஜினிகாந்த், அஜித் குமார், விஜய் என முதன்மை நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார்.
இது மட்டுமின்றி பாலிவுட் முதன்மை நட்சத்திரம் ஷாருக்கான் உடனும், பாகுபலி நட்சத்திரம் பிரபாஸ்சுடனும் ஓர் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
யோகி பாபு நகைச்சுவை கதாபாத்திரங்களுக்கு மட்டுமில்லாமல், சில சமூக கருத்துகளை வெளிப்படுத்தும் படங்களிலும் நடித்து கவனம் ஈர்த்துள்ளார். அந்த வகையில் இவரின் நடிப்பில் மண்டேலா படம் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்தது. இந்தப் படத்தில் யோகி பாபு சவரத் தொழிலாளியாக நடித்திருப்பார். இதே போல் குழந்தைகள் முன்னேற்ற கழகம் என்ன சில படங்களிலும் இவர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க ”புஷ்பா 2” ஓடிடி வெளியீடு அறிவிப்பு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
பட்ஜெட் 2025: 2025- 26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார்.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கூச்சலுக்கு மத்தியில் நிதியமைச்சர் 2025-06 பட்ஜெட்டை தாக்கல் செய்யத் தொடங்கினார்.
ரூ.12 லட்சம் வரை சம்பாதிக்கும் தனிநபர்களுக்கு வருமான வரி இல்லை என்று அறிவித்தார். புதிய வரி ஆட்சியின் கீழ் மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. புதிய வருமான வரி மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று அவர் கூறினார்.
புதிய வரி மசோதா வரி செலுத்துவோருக்குப் புரியும் வகையில் எளிமையாக இருக்கும் என்றும் நிதியமைச்சர் கூறினார்.
புற்றுநோய் மருந்துகள் உட்பட 36 உயிர்காக்கும் மருந்துகளை மலிவானதாக மாற்றப்படும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க பட்டியல், பழங்குடி மக்களுக்கு ரூ.5 லட்சம் வரை கடன்.. நிர்மலா சீதாராமன் அதிரடி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
பட்ஜெட் 2025: நாடாளுமன்றத்தில் , நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாரம்பரிய ‘பாஹி-கட்டா’ பாணி பையில் இணைக்கப்பட்ட டிஜிட்டல் டேப்லெட்டிலிருந்து தொடர்ந்து எட்டாவது பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
ஏப்ரல் 2025 (நிதியாண்டு 2025-26) தொடங்கும் நிதியாண்டுக்கான அவரது பட்ஜெட், 2014 முதல் நரேந்திர மோடி அரசாங்கத்தின் கீழ் தொடர்ந்து 14வது பட்ஜெட்டாகும், இதில் 2019 மற்றும் 2024 பொதுத் தேர்தல்களுக்கு முன்னதாக சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு இடைக்கால பட்ஜெட்களும் அடங்கும்.
2025-26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர், 5 லட்சம் எஸ்சி பெண் தொழில்முனைவோருக்கு ரூ. 5 லட்சம் வரை கடன் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் பெரிய தொழில்களுக்கு ஒரு உற்பத்தி பணி அமைக்கப்படும் என்றும் கூறினார். மேலும், தொழிலாளர் சார்ந்த துறைகளின் உற்பத்தித்திறனை மேம்படுத்த அரசாங்கம் வசதி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று கூறினார்.
கடன் உத்தரவாதக் காப்பீடு ரூ. 20 கோடியாக இரட்டிப்பாக்கப்படும், உத்தரவாதக் கட்டணம் 1 சதவீதமாக குறைக்கப்படும், பீகாரில் உணவு தொழில்நுட்பம், தொழில்முனைவோர் மற்றும் மேலாண்மைக்கான தேசிய நிறுவனம் நிறுவப்படும் என்றும் அவர் கூறினார்.
இதையும் படிங்க பட்ஜெட் இன்று தாக்கல்; தங்கம் விலை குறையுமா? அதிர்ச்சி கொடுக்கும் இன்றைய ரேட்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com