S.A. Ponnusamy | 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் வெற்றி வாகை சூடும் என சு.ஆ பொன்னுச்சாமி தெரிவித்துள்ளார்.
S.A. Ponnusamy | 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் வெற்றி வாகை சூடும் என சு.ஆ பொன்னுச்சாமி தெரிவித்துள்ளார்.
Published on: November 11, 2024 at 2:13 pm
Updated on: November 11, 2024 at 3:47 pm
S.A. Ponnusamy | 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் வெற்றி வாகை சூடும் என பத்திரிக்கையாளரும், அரசியல் விமர்சகருமான சு.ஆ பொன்னுச்சாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எந்த ஒரு அரசியல் கட்சியாக இருந்தாலும் அக்கட்சிக்கான அடிப்படை கட்டமைப்பு கிராமங்கள் தொடங்கி நகரங்கள் வரை சரியாக அமையவில்லை என்றால் அக்கட்சி தேர்தல் அரசியலில் வெற்றி பெறுவது என்பது சாத்தியமில்லாதது என்பது கடந்த காலங்களில் நிருபணமான ஒன்று. அதனால் தான் தமிழ்நாட்டில் அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக உள்ள இருபெரும் கட்சிகளான திமுக, அதிமுகவை இதுவரை வேறு எந்த கட்சிகளாலும் முழுமையாக வீழ்த்த முடியாமல் இருப்பதற்கு பிரதான காரணம் என்றால் அது மிகையாகாது.
அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் விஜய் அவர்கள் தனது ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் மன்றமாக மாற்றிய போதே கிட்டத்தட்ட ஒரு அரசியல் கட்சிக்கான கட்டமைப்புகளை நகரங்களில் தொடங்கி கிராமங்கள் வரை உருவாக்கியதால் அதன் நிர்வாகிகள் தமிழ்நாட்டின் ஊரக மற்றும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சைகளாக போட்டியிட்டு ஆண்ட, ஆளுங்கட்சிகளின் ஆள்பலம், பணபலம், அதிகாரபலம் இவற்றைக் கடந்து பலர் கணிசமான வாக்குகளை பெற்றதையும், சிலர் தேர்தலில் வெற்றி பெற்றதையும் காண முடிந்தது.
அதன் பிறகு விஜய் மக்கள் மன்றம் அரசியல் இயக்கமாக மாற்றப்பட்ட பிறகு தற்போது அதன் கட்டமைப்புகளை மேலும் வலுவாக அமைக்கும் பணிகளை அக்கட்சியின் தலைவர் திரு விஜய் அவர்கள் மேற்கொண்டு வருவதோடு, கட்சியை மக்களோடு நெருக்கமாக கொண்டு செல்ல தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, தங்கள் மீது வெறுப்பு அரசியலை உமிழும் பிற கட்சியினரைப் போல தாமும் அவ்வாறு நடந்து கொள்ளக் கூடாது என்பதை திடமான முடிவாக கொண்டு கட்சி கொடியேற்றுதல், கட்சிக்கான உறுப்பினர் சேர்க்கை என அக்கட்சியின் நிர்வாகிகளாக இருக்கும் இளைஞர்கள் படையை இன்னும் வீரியமுடன் செயல்பட முடுக்கி விட்டுள்ளதையும், அதற்கேற்ப இளங்கன்று பயமறியாது என்பதை போல தமிழ்நாட்டு அரசியலில் அசைக்க முடியாத மலையாக இருக்கும் திராவிட கட்சிகளை குடைந்து தூள், தூளாக சிதற வைக்கும் உளி போல அவர்கள் களமாடி வரும் காட்சிகளையும் தமிழ்நாடு முழுவதும் காண முடிகிறது.
மேலும் தமிழக வெற்றிக் கழகம் எங்களுக்கு போட்டியே இல்லை, தமிழக வெற்றிக் கழகத்தைப் பற்றி பேசாதீர்கள் என்று கட்சியின் நிர்வாகிகளுக்கு திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பல்வேறு அமைச்சர் பெருமக்கள் மட்டுமின்றி திமுக நிர்வாகிகள் பலரும் கூறி வந்தாலும் கூட பேசாதே, நினைக்காதே என கூறிக் கொண்டே சதா தமிழக வெற்றிக் கழகம் குறித்தே அவர்கள் (திமுகவினர்) சிந்தித்து கொண்டிருப்பதை நன்கு உணர முடிகிறது.
ஆக இதே வீரியத்துடனும், வெறுப்பு அரசியலை உமிழாமல் சாணக்கியனாக இருந்து தவெகவினர் செயல்பட்டால் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய போட்டியாளராக களத்தில் நிற்கும், மிகப்பெரிய வெற்றி வாகை சூடும் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க ‘உலகநாயகன்’ பட்டம் துறப்பு; கமல்ஹாசன் திடீர் அறிக்கை!
,திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com