TNPSC | தமிழக அரசில் உதவிப் பிரிவு அலுவலர் பணிக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
TNPSC | தமிழக அரசில் உதவிப் பிரிவு அலுவலர் பணிக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Published on: November 11, 2024 at 2:56 pm
TNPSC | தமிழக அரசில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-தொகுதி 5ஏ பணிகளில் உள்ள பதவிக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: உதவிப் பிரிவு அலுவலர்(Assistant Section Officer)
காலியிடங்கள்: 35
தகுதி
ஏதேனும் ஒரு துறையில் இளங்களை பட்டம் பெற்றிருப்பதோடு, தமிழக அரசின் ஏதாவது ஒரு துறையில் இளங்களை உதவியாராகவோ அல்லது உதவியாளராகவோ பணி அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.
வயதுவரம்பு
35 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் சலுகைகள் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை
எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வு சென்னையில் நடைபெறும்.
தேர்வு தேதி
எழுத்துத் தேர்வு 2025 ஜனவரி 4 ஆம் தேதி நடைபெறும். எழுத்துத் தேர்வில் பொது தமிழ், பொது ஆங்கிலம் பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்
விண்ணப்பக் கட்டணம் ரூ.100 ஆகும். இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
தகுதியானவர்கள் நவம்பர் 15-ஆம் தேதிக்குள் www.tnpscexams.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
இதையும் படிங்க டிகிரி தகுதி; ஐ.டி.பி.ஐ. வங்கியில் வேலை: உடனே விண்ணப்பிங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com