Actor Kamal Haasan | உலகநாயகன் பட்டம் வேண்டாம் என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
Actor Kamal Haasan | உலகநாயகன் பட்டம் வேண்டாம் என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
Published on: November 11, 2024 at 2:03 pm
Updated on: November 11, 2024 at 2:08 pm
Actor Kamal Haasan | நடிகர் கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “என் மீது பிரியம் கொண்ட அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். “உலக நாயகன்” உள்ளிட்ட பட்டங்கள் சொல்லி அழைக்காமல் கமல்ஹாசன், கமல் அல்லது KH என்று அழைத்தால் போதும்” என தெரிவித்துள்ளார். சினிமா துறையை பொருத்தமட்டில் நடிகர் நடிகைகளுக்கு அடைமொழி வைத்து அழைப்பது அந்த காலத்தில் இருந்தே தொடர்கிறது.
எம்ஜிஆர், சிவாஜி கணேசன் தொடங்கி நடிகைகள் வரையும் இந்தப் பாரம்பரியம் தொடர்கிறது. ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவரும் இதே போல் அடைமொழியோடு அழைக்கப்பட்டனர். இந்த நிலையில், “கமல்ஹாசன் தனக்கு வழங்கப்பட்ட உலகநாயகன் என்ற பட்டத்தை துறந்துள்ளார். தன்னை கமல் என்றோ கமல்ஹாசன் என்றோ கே ஹெச் என்றோ அழைத்தால் போதுமானது என தெரிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே நடிகர் அஜித்குமார் தன்னை தல என்று அழைக்க வேண்டாம் என தெரிவித்து இருந்தார். அப்போது அவர் வெளியிட்ட அறிக்கையில், “ரசிகர்களின் அன்புக்கு நன்றிகள் பல. என்னை அஜித் என்றோ அஜித்குமார் என்றோ ஏ கே என்றோ அழைத்தால் போதுமானது” என தெரிவித்து இருந்தார். அந்த வகையில் நடிகர் அஜித்குமாரின் வழியில் கமல்ஹாசனும் தனக்கு வழங்கப்பட்ட பட்டத்தை துறந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : இதயத்தை பிடித்து இழுத்த அமரன்; அழாமல் வெளிவர முடியாது: சீமான்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com