Seeman | அமரன் சிறந்த படைப்பு என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
Seeman | அமரன் சிறந்த படைப்பு என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
Published on: November 4, 2024 at 8:27 pm
Seeman | மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் உண்மை கதையை தழுவி எடுக்கப்பட்ட படம் அமரன். இந்தப் படத்தில் கதாநாயகனாக சிவ கார்த்திகேயனும், நடிகையாக சாய் பல்லவியும் நடித்துள்ளனர்.
திரையரங்குளில் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் படத்துக்கு சீமான் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து சீமான், “எங்களின் அண்ணன் கமல்ஹாசன் எத்தனையோ படங்களை தயாரித்து, இயக்கி நடித்துள்ளார். ஆனால் அவரின் படைப்புகளில் இது ஓர் ஆகச்சிறந்த படைப்பு. இந்த நாட்டிற்கும் ராணுவ வீரர்களுக்கும் அவர் அளித்த சிறந்த படைப்பாகதான் இதனை பார்க்கிறேன். அமரன் திரைப்படம் இதயத்தை பிடித்து இழுத்துள்ளது.
அழாமல் நெகிழாமல் யாரும் வெளியே வர முடியாது. அப்படி ஓர் சிறந்த படைப்பாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளது. அமரன் திரைப்படம் தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியானது. இந்திய இராணுவத்தின் ராஜ்புத் படைப்பிரிவின் அதிகாரியான மேஜர் முகுந்த் வரதராஜன், தனது அணியின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளித்த அச்சமற்ற தலைவராக நினைவுகூரப்படுகிறார்.
அவர் ஜம்மு காஷ்மீரில் உள்ள 44 ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் என்ற உயரடுக்கு பயங்கரவாத எதிர்ப்பு பிரிவில் மேஜராக இருந்தார். தமிழ்நாட்டின் சென்னையில் ஏப்ரல் 12, 1983 இல் பிறந்த முகுந்த் வரதராஜன், சிறுவயதிலிருந்தே தலைமைப் பண்புகளுடன் இருந்தார். அமரன் திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸிடம் உதவி இயக்குனராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க உண்மையான அமரன்; யார் இந்த மேஜர் முகுந்த் வரதராஜன்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com