Fighter jet crash | மிக்-29 போர் விமானம் ஆக்ரா அருகே விழுந்து நொறுங்கியது.
Fighter jet crash | மிக்-29 போர் விமானம் ஆக்ரா அருகே விழுந்து நொறுங்கியது.
Published on: November 4, 2024 at 7:39 pm
Fighter jet crash |உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா அருகே மிக்-29 போர் விமானம் திங்கள்கிழமை (நவ.4, 2024) விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்து இரண்டு விமானிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
பஞ்சாப் மாநிலம் அடம்பூரில் இருந்து போர் விமானம் புறப்பட்டு, பயிற்சிக்காக ஆக்ராவுக்கு சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த நிலையில், சம்பவம் தொடர்பாக நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
போர் விமானம் தரையில் விழுந்து நொறுங்கிய உடனேயே ஒரு பெரிய தீ ஜுவாலை காணப்பட்டது. முன்னதாக, விமானி உட்பட இருவர் ஜெட் விமானத்தில் இருந்து குதித்து தங்கள் உயிரைக் காப்பாற்றினர். விபத்து நடந்த இடத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் விமானிகள் இருவரும் வெளியேறியுள்ளனர்.
இது குறித்து இந்திய விமான படை ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “பார்மர் செக்டரில் ஒரு வழக்கமான இரவுப் பயிற்சியின் போது, IAF MiG-29 ஒரு முக்கியமான தொழில்நுட்பக் கோளாறை எதிர்கொண்டது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமானி பாதுகாப்பாக உள்ளார், உயிர் அல்லது சொத்து சேதம் ஏதும் ஏற்படவில்லை. நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், மிக்-29 போர் விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்தது இது முதல் முறை அல்ல. இதற்கு முன் செப்டம்பர் 2ஆம் தேதி ராஜஸ்தானின் பார்மரில் மிக்-29 போர் விமானம் தொழில்நுட்பக் கோளாறால் விழுந்து நொறுங்கியது என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க உத்தரகாண்ட்: 200 அடி பள்ளத்தில் பாய்ந்த பேருந்து; 23 பயணிகள் பலி, 15 பேர் காயம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com