Gold Rate today in Chennai | சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 680 அதிகரித்து விற்பனையாகிறது.
Gold Rate today in Chennai | சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 680 அதிகரித்து விற்பனையாகிறது.
Published on: November 8, 2024 at 10:22 am
Gold Rate today in Chennai | சர்வதேச சந்தை நிலவரங்கள் காரணமாக தங்கம் விலையில் அதிரடி மாற்றம் ஏற்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, தீபாவளி பண்டிகையையொட்டி தங்கம் விலை ரூ. 60 ஆயிரத்தை நெருங்கியது. இது நகை பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக தங்கம் விலை தொடர்நது சரிவை சந்தித்து. இது சற்று ஆறுதலை தரும் வகையில் இருந்த நிலையில், இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 680 உயர்ந்துள்ளது.
சென்னையில் தங்கம் நேற்று கிராம் ரூ.7,200 க்கும், பவுன் ரூ. 57,600 க்கும் விற்பனையானது. இந்நிலையில், இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ. 85 உயர்ந்து கிராம் ரூ. 7,285 ஆகவும் பவுன் ரூ. 58,280 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தூய தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ. 7,790 ஆகவும் பவுன் ரூ. 62,320ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெள்ளி விலை
வெள்ளி விலையை பொருத்தவரை நேற்று கிராம் ரூ.102-க்கும் கிலோ வெள்ளி ரூ.102,000-க்கும் விற்பனையானது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 1 அதிகரித்து கிராம் ரூ.103 ஆகவும் கிலோ வெள்ளி ரூ.103,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க
உங்கள் கண்களுக்கு சவால் விடும் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் தற்போது இணையத்தில் அனைவராலும் விரும்பப்பட்டு வருகிறது. இது உங்கள் உள்ளார்ந்து கவனிக்கும் திறனை வளர்த்து நேரத்தை மிகவும் அழகாக ஆக்குகிறது. குறிப்பிட்ட நேரத்திற்குள் புதிரை தீர்க்க வேண்டும் என்ற கட்டுப்பாடு உங்கள் அறிவாற்றல் திறன்களை அதிகரிக்கிறது. எனவே இந்த புதிர் விளையாட்டு பலராலும் விரும்பி விளையாடப்படுகிறது.
இது உங்கள் கண்காணிப்புத் திறன் மற்றும் உற்றுனோக்கும் திறனைக் கூர்மைப்படுத்தும். கீழே உள்ள படத்தில் காய்ந்த மரக்கட்டைகள், கற்கள், வெட்டப்பட்ட மரங்கள் இருப்பது போன்று உள்ளது. இதில் எங்கேயோ ஒரு பாம்பு பதுங்கி இருக்கிறது. இந்த பாம்பை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடிந்தால், உங்களுடைய கவனித்தல் திறன் மற்றும் IQ (அறிவாற்றல் அளவு) மிகவும் உயர்ந்ததாக கருதப்படுகிறது.
பலருக்கும் பாம்பை காண்பது சிரமமாக இருக்கலாம், ஏனெனில் அது சூழ்நிலையுடன் மிகச் சரியாக கலந்து இருக்கும். இதோ உங்களுக்கான நேரம் தொடங்கிவிட்டது 1 2 3…
மறைந்திருக்கும் பாம்பை கண்டுபிடித்து விட்டீர்களா? நீங்கள் பாம்பை கண்டறிவதில் வெற்றி பெற்றிருந்தால், ஆப்டிகல் மாயை IQ சோதனையைத் தீர்ப்பதில் நீங்கள் உண்மையிலேயே தலைசிறந்தவர். உங்களால் பாம்பை கண்டுபிடிக்க முடியாவிட்டால், கவலைப்பட வேண்டாம். உங்களுக்கான விடையை காண திராவிடன் டைம்ஸ் (dravidantimes.com) உதவி செய்யும். மனதைக் கவரும் இந்தப் புதிருக்கான தீர்வைப் பார்க்கத் தயாரா? இதோ!
இந்த ஆப்டிகல் மாயை சோதனையை தீர்க்க உங்கள் நண்பர்களுக்கும் சவால் விடுங்கள்! எவ்வளவு வேகமாக அவர்களால் பாம்பை கண்டுபிடிக்க முடிகிறது என்று பாருங்கள்.
இதையும் படிங்க : இறால் கூட்டத்துக்கு நடுவே நண்டு; காக்கை போல் சரியா தூக்குங்க பார்க்கலாம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
சென்னை மே 9 2025: தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக திகழும் லோகேஷ் கனகராஜ், சினிமாவில் கதாநாயகனாக நடிக்க உள்ளார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.
இயக்குனர் யார்?
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் குறித்து வெளியான தகவலில், அவர் நடிக்கும் புதிய படத்தை கேப்டன் மில்லர் என்ற படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இது சாத்தியமாகும் பட்சத்தில் இயக்குனராக சினிமா துறையில் அறிமுகம் ஆகி நடிகராக உயர்ந்தவர் என்ற பெருமையை லோகேஷ் கனகராஜ் பெறுவார்.
தமிழில் மாநகரம் என்ற திரைப்படத்தை இயக்கி அறிமுகமான லோகேஷ் கனகராஜ் அதன் பின்னர் கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என வரிசையாக ஹிட் படங்களை கொடுத்தார். இதில் மாஸ்டர் மற்றும் லியோ இளைய தளபதி விஜயின் படங்களாகும். விக்ரம் கமல்ஹாசனின் திரைப்படம்.
அடுத்து தற்போது லோகேஷ் கனகராஜ் நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்துள்ளார். இந்தப் படத்திற்கு கூலி என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் ரஜினிகாந்த், நாகர்ஜுனா, உபேந்திரா, ஷாப்ன் சாகீர், சத்யராஜ், சுருதிஹாசன் என பல நட்சத்திர பட்டாளங்கள் உள்ளன.
இதையும் படிங்க; சமந்தா-ராஜ் ரிலேஷன்ஷிப் உண்மையா? திடீர் வைரலான புகைப்படம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
சென்னை, மே 9 2025: பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், “ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய இராணுவ வீரர் முரளி நாயக், பாகிஸ்தான் நடத்திய தொடர் பீரங்கித் தாக்குதலில் வீரமரணம் அடைந்தார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.
வீர வணக்கம்
நம்மைக் காப்பதற்காக இன்னுயிரை ஈந்த அந்த பெருமகனுக்கு எனது வீரவணக்கங்களை செலுத்துகிறேன். பயங்கரவாதிகளின் புகலிடமாகத் திகழும் பாகிஸ்தான் இந்தியா மீது அப்பட்டமாக பயங்கரவாதத் தாக்குதல்களை ஏவி விட்டு வருகிறது.
அவற்றிலிருந்து நாட்டையும், நம்மையும் காக்கும் புனிதப் பணியில், தங்களின் உயிரைப் பணயம் வைத்து நமது படைவீரர்கள் ஈடுபட்டுள்ளனர். மிகவும் நெருக்கடியான இந்தக் காலக்கட்டத்தில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு அவர்களுக்கு துணை நிற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
டி.டி.வி தினகரன் இரங்கல்
இதேபோல் டி.டி.வி தினகரன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “ஜம்மு காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் நடத்திய தொடர் தாக்குதலில், அங்கு மக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்திய ராணுவ வீரர் திரு.முரளி நாயக் அவர்கள் வீரமரணம் அடைந்த செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது.
முரளி நாயக் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக ராணுவத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்ளும் அதே நேரத்தில், பாகிஸ்தானின் பயங்கரவாதத்திற்கு எதிராக நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் நமது ராணுவ வீரர்களுக்கு நாம் அனைவரும் உறுதுணையாக நிற்போம்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக மு.க. ஸ்டாலின் பேரணி; MH ஜவாஹிருல்லா வரவேற்பு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
சென்னை, மே 9 2025: நடிகை வாணி போஜன் அண்மையில் அளித்த பேட்டியில் தாம் அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்வது குறித்து மனம் திறந்து பேசினார்.
அப்போது, ” என்னிடம் மனம் திறந்து பேசுங்கள் என சொல்கிறார்கள்; பொதுவாகவே நான் அப்படித்தான்.
என் மனதில் பட்டதை பட்டென பேசி சர்ச்சையில் சிக்கிக் கொள்கிறேன். எனது இந்த பழக்கத்தை மாற்ற நான் முயற்சிகள் செய்து வருகிறேன். ஆனால் என்னால் முடியவில்லை” என்றார்.
தொடர்ந்து சின்னத்திரை மற்றும் பெரிய திரை என நான் பேதம் பார்ப்பதில்லை எனக் கூறிய நடிகை வாணி போஜன், ” எனது கதாபாத்திரத்தை சிறப்பாக வடிவம் கொடுப்பதில் தான் எனது கவனம் இருக்கும்; மாறாக நான் சின்னத்திரை பெரிய திரை என்றெல்லாம் பிரித்துப் பார்க்க மாட்டேன் என்றார்.
சட்னி சாம்பார்
இதற்கிடையில் நடிகை வாணி போஜன் தனக்கு சட்னி சாம்பார் என்ற வெப் தொடருக்கு சிறந்த பாராட்டுக்கள் கிடைத்தன; அது எனக்கு மகிழ்ச்சியை கொடுத்தது என்றார். தொடர்ந்து தான் நல்ல கதாபாத்திரங்களை ஒருபோதும் மிஸ் செய்ய மாட்டேன் என்றும் நடிகை வாணி போஜன் கூறினார்.
இதையும் படிங்க நான்தான் ஷாருக்.. வெளிநாட்டு மீடியாக்களிடம் அறிமுகமான ஷாருக்கான்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
சென்னை, மே 9 2025: கோடை காலத்தில் அனைவரின் வீட்டிலும் பொதுவாக வாங்கக்கூடிய பழங்களில் ஒன்று தர்பூசணி. தர்பூசணி உடலை குளிர்ச்சியாகவும் நீரேற்றம் ஆகவும் வைக்க வழி வகுக்கிறது. பல ஆரோக்கிய நன்மைகளை கொண்ட தர்பூசணி பழத்தில் தோலை பயன்படுத்தி சுவையான அல்வா எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்
தர்பூசணி தோல் – 1 கப்
நெய் – 2 டேபிள்ஸ்பூன்
பால்- ½ கப்
சர்க்கரை – 1/2 கப்
ஏலக்காய் தூள் – சிறிதளவு
முந்திரி, பாதாம் -15
செய்முறை
முதலில் தர்பூசணி பழத்தின் கடினமான வெளிப்புற பச்சை தோலை அகற்றி மீதமுள்ள பகுதிகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். இந்த துண்டுகளை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து நெய் காய்ந்ததும் அதில் கடலை மாவு சேர்த்து வறுக்கவும். கடலை மாவுக்கு பதிலாக ரவையும் சேர்க்கலாம்.
பின்னர் இதனுடன் அரைத்து வைத்த தர்பூசணி பழத்தின் விழுதினை சேர்த்து நன்கு கலந்து விடவும். அடுப்புத்தீயை ஹை ஃபிளேமில் வைத்து கிளறிக் கொண்டே இருக்கவும். 15 நிமிடம் வரை நன்கு கிளறி வேக வைக்கவும். பின்னர் இதனுடன் அரை கப் பால் சேர்த்து கலந்து விடவும். பால் வற்றி கெட்டியாகி வரும் வரை தொடர்ந்து சமைக்கவும்.
பின்னர் இதனுடன் ஒரு கப் சர்க்கரை மற்றும் ஒரு சிட்டிகை ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து விடவும். அடுப்புத்தீயை மீடியம் ஃபிளேமில் வைத்து இதனுடன் சிறிது நெய் சேர்த்து விருப்பமான உலர் பழங்கள் அதாவது முந்திரி, பாதாம் சேர்த்து கலந்து விடவும். இவை நன்கு கலந்து அல்வா பதம் வந்ததும் இறக்கவும். இப்போது சுவையான தர்பூசணி அல்வா தயார்.
இதையும் படிங்க தயிர் சாதத்துக்கு தொட்டுக்கலாம்.. உருளைக் கிழங்கு வறுவல்.. இப்படி பண்ணுங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com