Sivakarthikeyan Congratulates Vijay | தவெக முதல் மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு நடிகர் சிவகார்த்திகேயன், விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Sivakarthikeyan Congratulates Vijay | தவெக முதல் மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு நடிகர் சிவகார்த்திகேயன், விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Published on: October 27, 2024 at 3:55 pm
Updated on: October 27, 2024 at 4:17 pm
Sivakarthikeyan Congratulates Vijay | நடிகர் விஜய்யின் அரசியல் வருகை தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு இன்று நடைபெறுவதை முன்னிட்டு விக்கிரவாண்டி சாலை ஸ்தம்பித்து போயிருக்கிறது. விஜய் என்ன பேசப் போகிறார். கொள்கை குறித்த தகவல்கள் அனைத்தையும் எதிர்பார்த்து தொண்டர்கள் அங்கு குவிந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்-க்கு சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நடிகர் சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் தள பக்கத்தில் “இன்று தனது புதிய பயணத்தை தொடங்கவிருக்கும் விஜய் சாருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து. நடிகர் ஜெயம் ரவி வெளியிட்டுள்ள வாழ்த்துப்பதிவில், “தளபதி விஜய் அண்ணாவின் இந்த அபாரமான மைல்கல்லுக்கு வாழ்த்துகள். சினிமாவில் நீங்கள் காட்டிய அதே ஆர்வத்தையும் அர்ப்பணிப்பையும் அரசியலில் கொண்டு வாருங்கள். இந்த புதிய பயணம் சிறப்பான வெற்றியடைய வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.
“நடிகர் விஜய்யின் புதிய பயணம் வெற்றி பெற எனது வாழ்த்துகள்” என்று பதிவிட்டு, த.வெ.க. கொடியை ஏந்தி நிற்கும் விஜய்யின் வரைபடத்தையும் பகிர்ந்துள்ளார் இயக்குனர் கார்திக் சுப்புராஜ்.
இதையும் படிங்க ஐஸ்வர்யா ராய் பாதுகாவலர் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com