Aishwarya Rai bodyguard | நடிகை ஐஸ்வர்யா ராயின் பாதுகாவலர் சம்பளம் தொடர்பாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Aishwarya Rai bodyguard | நடிகை ஐஸ்வர்யா ராயின் பாதுகாவலர் சம்பளம் தொடர்பாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Published on: October 27, 2024 at 9:25 am
Updated on: October 27, 2024 at 9:55 am
Aishwarya Rai bodyguard | அரசியல்வாதிகளுக்குப் பிறகு, திரையுலகைச் சேர்ந்தவர்கள் தங்கள் பாதுகாப்பிற்காக அதிக பாதுகாப்பை விரும்புகின்றனர்.
சல்மான் கான், ஷாருக்கான், தளபதி விஜய் போன்ற பல நடிகர்கள் விமான நிலையங்களிலும், பார்ட்டிகள் அல்லது திருமணம் போன்ற பெரிய நிகழ்வுகளிலும் பாடிகாட் உடனே கலந்துகொள்கின்றனர்.
இந்த நிலையில், பாலிவுட் நடிகை, ஐஸ்வர்யா ராய் பச்சனுக்கு பாதுகாவலராக உள்ளார் சிவராஜ். நடிகை பயணம் செய்யும்போது, அவரைப் பார்க்க அவரது ரசிகர்களும் கூடுகிறார்கள். சிவராஜ் தற்போது பச்சன் குடும்பத்திற்காக பணிபுரிந்து வருகிறார், மேலும் ஐஸ்வர்யா ராய் பச்சனை பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார்.
முன்னதாக, 2015 ஆம் ஆண்டு, ஐஸ்வர்யா ராய் தனது மெய்க்காப்பாளரான சிவராஜின் திருமணத்தில் கலந்து கொண்டார், அவரது புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலானது. ஐஸ்வர்யா தனது பிரபலத்தை அறிந்திருந்தும், திருமணத்திற்கு வந்து தனது மெய்க்காப்பாளரின் திருமணத்தில் கலந்துகொண்டு அனைவரின் மனதையும் வென்றார்.
ஐஸ்வர்யா ராய் வீட்டை விட்டு வெளியே செல்வதை நாம் அரிதாகவே பார்க்கிறோம். ஆனால் அவர் வீட்டிற்கு வெளியே கால் வைத்தவுடன் சிவராஜின் கடமை தொடங்குகிறது.
சிவராஜூம் ஜஸ்வர்யா ராய்யை கண்ணை இமை போல் பாதுகாக்கிறார். இவருக்கு சம்பளமாக பல லட்சங்கள் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க இன்ஸ்டாவில் ஐஸ்வர்யா ராய் ஃபாலோ செய்யும் ஒரே ஒருவர் யார் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com