TVK Conference | தமிழக மக்கள், அரசியல் கட்சியினர் அனைவரிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு தொடங்கியது.
TVK Conference | தமிழக மக்கள், அரசியல் கட்சியினர் அனைவரிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு தொடங்கியது.
Published on: October 27, 2024 at 4:58 pm
TVK Conference | நடிகர் விஜய்யின் அரசியல் வருகை தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு இன்று நடைபெறுவதை முன்னிட்டு விக்கிரவாண்டி சாலை ஸ்தம்பித்து போயிருக்கிறது. விஜய் என்ன பேசப் போகிறார். கொள்கை குறித்த தகவல்கள் அனைத்தையும் எதிர்பார்த்து தொண்டர்கள் அங்கு குவிந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு தமிழ்ப் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகலோடு தொடங்கியது. இந்நிலையில், மாநாட்டு மேடைக்கு சரியாக நான்கு மணிக்கு விஜய் வருகை தந்துள்ளார். தொண்டர்களுக்கு நடுவில் அமைக்கப்பட்ட ரேப்வாக் மேடையில், விஜய் முகம் மலர்ந்த சிரிப்போடு நடந்து வந்தார்.
எதிர்பார்க்க முடியாத அளவில் கூடிய அவரது தொண்டர்களை பார்த்த மகிழ்ச்சியில் விஜய் கண் கலங்கினார். பின்னர் சுதந்திர போராட்ட வீரர்கள், மொழிப்போர் தியாகிகளுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் தவெக தலைவர் விஜய். தொடர்ந்து மாநாடு நடைபெற்று வரும் நிலையில், விஜய் என்ன பேசப் போகிறார் என்ற ஆர்வத்தில் அவரது தொண்டர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த திரை பிரபலங்கள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com