Gold Rate today in Chennai | சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 520 உயர்ந்து புதிய உச்சம் தொட்டுள்ளது.
Gold Rate today in Chennai | சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 520 உயர்ந்து புதிய உச்சம் தொட்டுள்ளது.

Published on: October 26, 2024 at 10:21 am
Gold Rate today in Chennai | சென்னையில் தங்கம் நேற்று கிராம் ரூ.7,295 ஆகவும், பவுன் ரூ. 58,360 க்கும் விற்பனையானது. இந்நிலையில், இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ. 65 உயர்ந்து கிராம் ரூ. 7,360 ஆகவும் பவுன் ரூ. 58,880 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தூய தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ. 7,865 ஆகவும் பவுன் ரூ. 62,920ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெள்ளி விலை
வெள்ளி விலையை பொருத்தவரை கிராம் ரூ.107 ஆகவும் கிலோ வெள்ளி ரூ.107,000 ஆகவும் நேற்றைய விலையிலேயே காணப்படுகின்றது.
இதையும் படிங்க
புதுடெல்லி, ஜன.14, 2026: 2025ஆம் ஆண்டு, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனம், செயற்கை நுண்ணறிவு (AI) அதிகரித்த பயன்பாட்டால், நிறுவனமுழுவதும் பெரிய அளவிலான மறுசீரமைப்பை அறிவித்தது.
இதன் விளைவாக பணிநீக்கங்கள் நடைபெற்றன. தற்போது, அந்த மறுசீரமைப்பு திட்டத்துடன் தொடர்புடைய பணிநீக்கங்கள் 2026ஆம் ஆண்டிலும் தொடரும் என TCS உறுதிப்படுத்தியுள்ளது.
மூன்றாம் காலாண்டு முடிவுகளை அறிவித்த பிறகு, “பணியாளர் வெளியேற்றம் அடுத்த காலாண்டிலும் தொடரும். ஆனால் குறிப்பிட்ட இலக்கு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. ஒவ்வொரு பணிநீக்கமும் சரியான காரணத்துடன், நிறுவனத்தின் உள்நாட்டு நடைமுறைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும்” என டி.சி.எஸ் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பணியாளர் எண்ணிக்கை குறைவதும், அலுவலக வருகை விதிகள் கடுமையாவதும், மதிப்பீடுகள் தாமதமாவதும் காரணமாக, பணியாளர்கள் கவலைக்குள்ளாகியுள்ளனர்.
இது தொடர்பாக, மணிகண்ட்ரோல் வெளியிட்ட தகவலின்படி, டி.சி.எஸ் மனிதவளத் தலைவர் சுதீப் குன்னுமல், “அக்டோபர்–டிசம்பர் காலாண்டில் சுமார் 1800 பணியாளர்கள் நீக்கப்பட்டனர்” என பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கம்ப்யூட்டரில் விண்டோஸ் யூஸ் பண்றீங்களா? எச்சரிக்கை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
சென்னை, ஜன.14, 2026: தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன், செவ்வாய்க்கிழமை, குவைத்-இ-மில்லத் மகளிர் அரசு கல்லூரியில் மாணவிகளிடம் உரையாற்றியபோது, வடஇந்திய மாநிலங்களில் பெண்களின் நிலையை தமிழ்நாட்டுடன் ஒப்பிட்டு கூறிய கருத்துகள் அரசியல் மற்றும் சமூக விவாதத்தை தூண்டியுள்ளன.
இந்த விழாவில் பேசிய தயாநிதி மாறன், “வடஇந்திய மாநிலங்களில், பெண்கள் கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகளைத் தொடரத் தடுக்கப்படுவதாகவும், வீட்டில் இருந்து வீட்டு வேலை செய்வதற்கே ஊக்குவிக்கப்படுவதாகவும் கூறினார்.
தொடர்ந்து, “நமது மாணவிகள் பெருமைப்பட வேண்டும். வடஇந்திய மாநிலங்களில், பெண் குழந்தைகளை வேலைக்குச் செல்ல வேண்டாம், வீட்டில் இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால் இங்கே, நாங்கள் பெண்களைப் படிக்கச் செய்கிறோம்,” என்றார்.
திராவிட மாடல் ஆட்சி
தொடர்ந்து, “தமிழ்நாடு அரசு மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி, திராவிட இயக்கத்தின் சமூக நீதி மற்றும் பெண்கள் கல்வி கொள்கையைத் தொடர்ந்து செயல்படுத்துவதாகவும், தமிழ்நாடு “இந்தியாவின் சிறந்த மாநிலம்” எனவும் அவர் புகழ்ந்தார்.
மேலும், சமூக சீர்திருத்தவாதி பெரியார் குறித்து குறிப்பிட்ட அவர், திராவிட சிந்தனை பெண்கள் கல்விக்கான அடித்தளத்தை அமைத்ததாகவும், தற்போதைய அரசு அதையே பின்பற்றுவதாகவும் தெரிவித்தார்.
உதயநிதி ஸ்டாலின்
இந்த நிகழ்ச்சி, “உலகம் உங்கள் கையில்” திட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்றது. நிகழ்ச்சியில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவிகளுக்கு 900 லேப்டாப்களை வழங்கினார்.
அப்போது உரையாற்றிய அவர், “பெண்கள் கல்வியை முடித்தவுடன், அவர்கள் சமூகத்திற்கு பெரும் பங்களிப்பு செய்கிறார்கள். நாங்கள் நமது மாணவிகளால் பெருமைப்படுகிறோம்,” என்றார்.
மேலும், 1974-ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கல்லூரிக்கு பெயரிட்டதும், அதன் கட்டமைப்பை வலுப்படுத்தியதும் நினைவுகூர்ந்தார்.
இதையும் படிங்க: திருச்சியில் சிறுமி பாலியல் வன்கொடுமை.. மூவர் கைது!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
புதுடெல்லி, ஜன.14, 2026: சீன நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி (CPC) பிரதிநிதிகள், செவ்வாய்க்கிழமை, புதுடெல்லியில் ஆர்.எஸ்.எஸ் (RSS) மூத்த நிர்வாகிகளை சந்தித்தனர். இதற்கு முன், அவர்கள் பாரதிய ஜனதா கட்சி (BJP) தலைவர்களுடன் கட்சித் தலைமையகத்தில் திங்களன்று கலந்துரையாடல் நடத்தியிருந்தனர்.
ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி கருத்து
இந்தச் சந்திப்பு குறித்து ஆர்.எஸ்.எஸ் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச துறை துணை அமைச்சர் தலைமையில் வந்த பிரதிநிதிகள், இந்தியாவில் உள்ள சீன தூதர் Xu Feihong உட்பட RSS-ஐ சந்திக்க விருப்பம் தெரிவித்தனர்.
“ஆர்.எஸ்.எஸ் எப்போதும் அனைத்து சிந்தனைகளும், மதங்களும் சேர்ந்தவர்களை சந்திக்கத் தயாராக உள்ளது. இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்த்ரேய ஹோசபாலே அவர்களை சந்தித்தனர்.
இது ஒரு அன்பு சந்திப்பு மட்டுமே” என்றார். எனினும், சந்திப்பில் நடந்த உரையாடல்களைப் பற்றி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
காங்கிரஸ் விமர்சனம்
காங்கிரஸ், இந்த சந்திப்பின் நேரம் மற்றும் நோக்கம் குறித்து கேள்வி எழுப்பியது. “சந்திப்பில் பிரச்சினை இல்லை. உரையாடலிலும் பிரச்சினை இல்லை. பிரச்சினை BJP-யின் இரட்டை முகம், போலித்தனம், ஏமாற்றம் மற்றும் வஞ்சகத்தில் உள்ளது,” என காங்கிரஸ் தலைவர் பவன் கேரா கூறினார்.
இதையும் படிங்க: செம்புக் குடத்தில் தங்கம்.. மதிப்பு இத்தனை லட்சமா? இன்ப அதிர்ச்சியில் குடும்பம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
ஹைதராபாத், ஜன.14, 2026: பிரபல நடிகர் பிரபாஸ் நடித்துள்ள, “தி ராஜா சாப்” திரைப்படம், பாக்ஸ் ஆபீஸில் மீள முடியாத வீழ்ச்சி நிலைக்கு சென்றுவிட்டது. கடந்த திங்கட்கிழமை (Day 4), இந்தியாவில் படம் வெறும் ₹6.60 கோடி நெட் வசூல் மட்டுமே செய்தது. இது முதல் நாளுடன் ஒப்பிடும்போது 88% குறைவான வசூல் ஆகும்.
வசூல் நிலவரம்
டைரக்டர் மாருதி இயக்கியுள்ள தி ராஜா சாப் படத்தில், பிரபாஸ், சஞ்சய் தத், மாலவிகா மோகனன், நித்தி அகர்வால், ரித்தி குமார், போமன் இரானி, சரீனா வாஹாப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படம் வெளியானதும் விமர்சகர்களிடமிருந்து பெரும்பாலும் எதிர்மறை விமர்சனங்கள் கிடைத்ததால், தி ராஜா சாப் பாக்ஸ் ஆபீஸில் வீழ்ச்சி கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: உடல் பருமன் போராட்டம்.. அமீர் கான் மகளுக்கு இப்படி ஓர் பிரச்னையா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
சென்னை, ஜன.14, 2026: மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி மற்றும் பி.பி.எஃப் ஆகிய இரண்டும் நீண்டகால முதலீட்டு திட்டங்கள். ஆனால் அவை சில முக்கிய அம்சங்களில் வேறுபடுகின்றன.
மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி
பி.பி.எஃப் முதலீடு
ரூ.1.5 லட்சம் முதலீடு
தபோது ₹1,50,000 வருடத்திற்கு SIP (12% வருமானம்) மற்றும் PPF (7.1% வட்டி) ஆகியவற்றில் 15 ஆண்டுகள் முதலீடு செய்தால் எவ்வளவு தொகை கிடைக்கும் என்பதை தமிழில் கணக்கிட்டு பார்ப்போம்.
SIP கணக்கீடு
பி.பி.எஃப்
பி.பி.எஃப் மற்றும் எஸ்.ஐ.பி ஒப்பீடு
மியூச்சுவல் ஃண்ட் எஸ்.எஸ்.பி திட்டத்தில் 5 ஆண்டுகளில் 12 சதவீத வளர்ச்சி இருந்தால் ரூ.6.19 கோடி வருவாய் பெறலாம். அதுவே பி.பி.எஃப் திட்டத்தில் முதலீடு செய்தால் 15 ஆண்டுகளில் ரூ.34.5 லட்சம் உறுதியான வருமானம் பெறலாம்.
Note: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. திட்டம் தொடர்பான ஆவணங்களை கவனமாக படிக்கவும்.
இதையும் படிங்க: ரூ.1 லட்சம் முதலீடு, ரூ.11 லட்சம் ரிட்டன்.. இந்தப் ஃபண்ட் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com