Kancheepuram | 16 வயது நர்சிங் மாணவி கர்ப்பிணி ஆன விவகாரத்தில் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
Kancheepuram | 16 வயது நர்சிங் மாணவி கர்ப்பிணி ஆன விவகாரத்தில் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
Published on: October 26, 2024 at 10:30 am
Kancheepuram | காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் தனது தாயாருடன் 16 வயதான சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அருகிலுள்ள நர்சிங் மையத்தில் நர்சிங் படித்து வருகிறார். இவருக்கு காவேரிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த குலசேகரன் (26) மற்றும் வெங்கட் ஆகிய இருவர் பழக்கமாகி உள்ளனர். இதேபோல், ஒளி முகமது பேட்டையைச் சேர்ந்த ரித்தீஷ் (21) என்பவரும் மாணவிக்கு அறிமுகமாகியுள்ளார்.
இவர்கள் மாணவியுடன் நெருங்கி பழகி வந்துள்ளனர். இந்த நிலையில் திருமண ஆசை காட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மாணவி கர்ப்பமானார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெண்ணின் தாய் காஞ்சிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து ரித்தீஷ் மற்றும் குலசேகரன் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். வெங்கட் என்பவர் தலைமறைவாகிவிட்டார். அவரைப் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மாணவியின் கர்ப்பத்திற்கு யார் காரணம்? மூன்று பேராலும் மாணவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டாரா? மாணவி பாதிக்கப்பட்டது எப்படி என்பன போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். 16 வயது நர்சிங் மாணவி, கர்ப்பமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com