ஜியோ தீபாவளி ஆஃபர்; ₹.899 ரீசார்ஜ் பிளான்: செக் பண்ணுங்க!

Jio Recharge | ரிலையன்ஸ் ஜியோ தீபாவளி ஸ்பெஷலாக “தீபாவளி தமாகா” சலுகை திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது.

Published on: October 26, 2024 at 12:28 pm

Jio Recharge | ஜியோ னது ரூ.899 மற்றும் ரூ.3,599 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களுடன் பிரத்யேகமான சிறப்பு பலன்களையும் இணைத்து புதிய சலுகைகளுடன் “தீபாவளி தமாகா“ ஆஃபரை அறிவித்துள்ளது.

இந்தச் சலுகையின் கீழ், 2024 அக்டோபர் 25 முதல் நவம்பர் 5 வரை ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள் ஈஸ்மை ட்ரிப் (EaseMyTrip), அஜியோ (Ajio) மற்றும் ஸ்விக்கி (Swiggy) போன்ற பிராண்டுகளிலிருந்து ரூ. 3,350 மதிப்புள்ள வவுச்சர்களைப் பெற முடியும். ரிலையன்ஸ் ஜியோ தீபாவளி சலுகையாக ரூ.899 மற்றும் ரூ.3599 திட்டங்களுக்கு கூடுதல் பயன்களை அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ. 899 ப்ரீபெய்ட் திட்ட வாடிக்கையாளர்களுக்கு, ஜியோ தினசரி 2ஜிபி டேட்டவுடன் கூடுதல் 20ஜிபி போனஸ், வரம்பற்ற அழைப்புகள் மற்றும் தினசரி இலவச 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. இந்த திட்டம் 90 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

அதேபோல், ரூ. 3599 -க்கான தினசரி 2.5ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் வழங்கப்படும் திட்டம் முழு ஆண்டு முழுவதும் நீட்டிக்கப்படுகிறது. கூடுதலாக, ரிலையன்ஸ் ஜியோ சில வவுச்சர்களையும் வழங்குகிறது. இது ஈஸ்மை ட்ரிப் மற்றும் ஸ்விக்கி போன்ற பிரபலமான பிராண்டுகளுடன் கூட்டு சேர்ந்துள்ளது.

ஈஸ்மை ட்ரிப்: ஹோட்டல்கள் மற்றும் விமான பயண முன்பதிவுகளுக்கு ரூ.3,000 தள்ளுபடி வவுச்சர் பொருந்தும்.
அஜியோ : ரூ. 999 மற்றும் அதற்கு மேல் வாங்கும் போது ரூ.200 தள்ளுபடி.
ஸ்விக்கி: உணவை ஆர்டர் செய்ய ரூ.150 தள்ளுபடி வவுச்சர்.

2024 ஜியோ தீபாவளி தமாகா கூப்பன்களை மைஜியோ (MyJio) ஆப் மூலம் வவுச்சர்களை பெறலாம்

  • மைஜியோவில் “சலுகைகள்” (Offers) பகுதியைத் திறக்கவும்.
  • “My winnings” என்பதைக் கிளிக் செய்யவும்.
  • விரும்பிய கூப்பன் கோடை தேர்ந்தெடுத்து காப்பி செய்து கொள்ளவும்.
  • க்யூரேட்டட் பார்ட்னர் இணைப்பைப் ஃபாலோ செய்து, பார்ட்னரின் இணையதளத்தில் செக் அவுட் செய்யும்போது குறியீட்டைப் பயன்படுத்தவும்

இதையும் படிங்க இந்தத் திட்டத்தில் ரீசார்ஜ் பண்ணுங்க; நெட் பிளிக்ஸ் இலவசம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com