Mythology | கர்ணனை ஏன் கொடை வள்ளல் என்று சொல்கிறார்கள் தெரியுமா?
Mythology | கர்ணனை ஏன் கொடை வள்ளல் என்று சொல்கிறார்கள் தெரியுமா?
Published on: October 26, 2024 at 12:50 pm
Mythology | கிருஷ்ண பரமாத்மா ஒரு முறை அஸ்தினாபுரத்திற்கு வந்திருந்தார். அப்போது அவர் பாண்டவர்களை சந்திக்க சென்றார். வாயிலில் இருந்தே வரவேற்ற யுதிஷ்டிரரின் முகம் வாடி இருப்பதை உணர்ந்து கொண்டார். ஏன் இந்த வாட்டம் என்று கேட்டபோது கொடைக்கு சிறந்தவன் கர்ணன் என்று உலகமே பாராட்டுகிறதே நாங்கள் அவனைவிட எவ்விதத்தில் குறைந்து போனோம் என்று கேட்டார்.
அதற்கு கிருஷ்ணர் தர்மரின் முகத்தையே பார்த்தார். சரி வா என்னோடு உன் தம்பிகளையும் அழைத்துக் கொள் உன் சந்தேகத்துக்கு விடை கிடைக்கிறதா எனப் பார்ப்போம். தர்மா இதோ ஒன்று தங்க குன்று மற்றொன்று வெள்ளி குன்று நீயும் உன் தம்பிகளும் சேர்ந்து இந்த இரண்டு குன்றுகளையும் தானமாக கொடுக்க வேண்டும் என்றார். யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம் ஆனால் ஒரு நிபந்தனை இன்று மாலைக்குள் கொடுத்து விட வேண்டும். முடியுமா? அது நடந்தால், கர்ணனைவிட நீங்கள் சிறந்தவர்கள் என நான் ஒப்புக்கொள்கிறேன் என்றார்.
தர்மர் தன் தம்பிமார்களைப் பார்த்தார். பீமன், வில்லிற் சிறந்த அர்ஜுனன், நகுலன், சகாதேவன் அனைவரும் களமிறங்கினார்கள். அந்தப் பக்கம் வருவோர் போவோரையெல்லாம் அழைத்து, தங்கக் குன்றையும் வெள்ளிக் குன்றையும் வெட்டி வெட்டிக் கொடுத்தார்கள். ஆனாலும், மாலை நெருங்கிக்கொண்டிருந்தது கொடுத்ததில் பாதி குன்றுகள் அப்படியே தீராமல் இருந்தன.
கிருஷ்ணர் நான் ஒரு யோசனை சொல்கிறேன். யாரையாவது அனுப்பி, கர்ணனை அழைத்துவரச் சொல் என்றார். கர்ணனும் வந்து சேர்ந்தான். “கர்ணா! இவை இரண்டும் அபூர்வக் குன்றுகள். கிருஷ்ணர் நான் ஒரு யோசனை சொல்கிறேன். யாரையாவது அனுப்பி, கர்ணனை அழைத்துவரச் சொல் என்றார். கர்ணனும் வந்து சேர்ந்தான். “கர்ணா! இவை இரண்டும் அபூர்வக் குன்றுகள்.
இன்று மாலைக்குள் இவற்றை கொடுத்துவிட வேண்டும். மாலையாகிவிட்டால் இவற்றின் மகிமை போய்விடும் உன்னால் முடியுமா? என கேட்க , கர்ணன் ஸ்ரீகிருஷ்ணரை வணங்கி அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டான். சற்று தூரத்தில் ஒரு வயோதிக விவசாயி ஒருவர் வருவதைப் பார்த்தான். ஓடிப் போய் அவர் கையைப் பிடித்து இழுத்து வந்தான்.
“ஐயா! நான் மகிழ்ச்சியோடு கொடுப்பதை தாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏற்பீர்களா?” விவசாயி சரியெனத் தலையசைத்தார். “இதோ இந்த தங்கக் குன்று, வெள்ளிக் குன்று இரண்டையும் உங்களுக்குக் கொடுக்கிறேன். கர்ணன் ஏன் சிறந்தவன் என்று இப்போது புரிகிறதா? என்று சொல்லாமல் தன் பார்வையாலேயே பார்த்தார் கிருஷ்ண பரமாத்மா.
இதையும் படிங்க : கிருஷ்ணர் கூறும் 5 வாழ்க்கை உபதேசம்; இது தெரிஞ்சா நீங்க கில்லி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com