கரூர், ஜூலை 29 2026: கரூர் மாவட்டம் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள திமுக முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜியின் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். போலீஸ் பாதுகாப்புடன் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் காலை 7 மணி முதல் சோதனையை தொடங்கி, ஆவணங்கள் மற்றும் பிற ஆதாரங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த சோதனை செந்தில் பாலாஜியின் ராமேஸ்வரப்பட்டி இல்லம் மட்டுமல்லாமல், மண்மங்கலம் அருகே உள்ள அவரது பூர்வீக வீடு, உதவியாளர் சுப்பிரமணி வீடு, திமுக நிர்வாகி பாஸ்கரன் வீடு மற்றும் கோதைநகர் பகுதியில் உள்ள கார்த்தி, ரமேஷ் ஆகியோரின் வீடுகள் என மொத்தம் 5 இடங்களில் ஒரே நேரத்தில் நடைபெற்று வருகிறது.
மேலும், கரூர் தொழிற்பேட்டையில் உள்ள டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். இதனிடையே, செந்தில் பாலாஜியின் பெற்றோரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சோதனையின் போது கைப்பற்றப்பட்ட பொருட்கள் அல்லது ஆவணங்கள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை.
இந்த நடவடிக்கை தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை இதுவரை விரிவான அதிகாரப்பூர்வ விளக்கத்தை வெளியிடவில்லை. சோதனை தொடர்ந்து நடைபெற்று வருவதால், சோதனையில் முடிவிலேயே முழு விவரமும் தெரியவரும்.
இதையும் படிங்க: கரூர் நெரிசல் மரணம்.. அரசுப் பணி ரத்து.. தமிழக அரசு மேல்முறையீடு?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராம்
ட்விட்டர்