கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம்: டிஜிபி அலுவலகத்தில் உதயநிதி புகார்!

Udhayanidhi Stalin DGP Complaint: கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் தொடர்பாக, டிஜிபி அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் புகார் அளித்துள்ளார்.

Published on: November 25, 2026 at 1:10 pm

Updated on: November 25, 2026 at 6:30 pm

சென்னை, நவ.25, 2026: மாவட்ட பெண் ஆட்சியர் ஒருவருக்கு பாலியல் ரீதியாகத் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரில், தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், அவரது தனிப்பட்ட இடத்திற்குள் அத்துமீற முயன்றதாகவும் அருள் விக்னேஷ் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் ஆளுங்கட்சி எம்எல்ஏ மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பெண் அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. மேலும், இந்த வழக்கில் நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக திமுக சார்பில் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் இந்த விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர்.

இதையும் படிங்க : கார்த்திகை தீப விவகாரம்.. தமிழக அரசுக்கு விஎச்பி கண்டனம்; மறுஆய்வு மனுவை திரும்பப் பெற கோரிக்கை!

ஜனநாயகம், சகோதரத்துவம், சமூக நீதி தழைத்தோங்கட்டும்.. அரசியலமைப்பு நாளில் முதல்மைச்சர் விஜய் வாழ்த்து!
Constitution Day 2026

ஜனநாயகம், சகோதரத்துவம், சமூக நீதி தழைத்தோங்கட்டும்.. அரசியலமைப்பு நாளில் முதல்மைச்சர் விஜய் வாழ்த்து!

காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்துங்கள்.. தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
Cauvery Gundar Link Project

காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்துங்கள்.. தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com