Thiruparankundram Deepam: திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் நவம்பர் 24-ம் தேதி கார்த்திகை தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் இடைக்கால அனுமதி வழங்கியுள்ளது. கோவில் நிர்வாகம் மற்றும் அரசு அதிகாரிகள் மட்டுமே தீபம் ஏற்ற அனுமதிக்கப்படுவர்.
Thiruparankundram Deepam: திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் நவம்பர் 24-ம் தேதி கார்த்திகை தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் இடைக்கால அனுமதி வழங்கியுள்ளது. கோவில் நிர்வாகம் மற்றும் அரசு அதிகாரிகள் மட்டுமே தீபம் ஏற்ற அனுமதிக்கப்படுவர்.

Published on: November 20, 2026 at 6:33 pm
புதுடெல்லி, நவ.20, 2026: மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலையில் உள்ள தீபத்தூணில் வரும் நவம்பர் 24-ம் தேதி கார்த்திகை தீபத்திருநாளன்று தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு இறுதியானது அல்ல என்றும், குறிப்பிட்ட நாளில் மட்டும் நடைமுறைக்கு வரும் இடைக்கால உத்தரவு என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி, திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது. இருப்பினும், டிசம்பர் 3-ம் தேதி தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாமல், உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே தீபம் ஏற்றப்பட்டது. இதையடுத்து, தமிழக அரசு மற்றும் தர்கா நிர்வாகம் தரப்பில் மேல்முறையீடுகள் செய்யப்பட்டன.
இந்த மேல்முறையீட்டு மனுக்களை நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு விசாரித்தது. விசாரணையின் முடிவில், நவம்பர் 24-ம் தேதி ஒருமுறை மட்டும் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மேலும், கோவில் நிர்வாகத்தினர் மற்றும் அரசு அதிகாரிகள் போன்ற அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே மலைக்குச் சென்று தீபம் ஏற்ற வேண்டும் என்றும், பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தீபம் ஏற்றுவதற்குப் போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், தேவைப்பட்டால் மத்திய தொழிற்பாதுகாப்புப் படையினரையும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தலாம் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: “காவிரி விவகாரத்தில் எத்தனை வழக்குகள்தான் தாக்கல் செய்வீர்கள்?” – தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com