Hethai Amman Festival Celebration: நீலகிரியில் ஹெத்தையம்மன் திருவிழா கோலாகலத்துடன் தொடங்கியுள்ளது; பாரம்பரிய நடனம், பாடல்களுடன் பக்தர்கள் கொண்டாடினார்கள்.
Hethai Amman Festival Celebration: நீலகிரியில் ஹெத்தையம்மன் திருவிழா கோலாகலத்துடன் தொடங்கியுள்ளது; பாரம்பரிய நடனம், பாடல்களுடன் பக்தர்கள் கொண்டாடினார்கள்.

Published on: November 20, 2026 at 2:54 pm
நீலகிரி, நவ.20, 2026: நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் இன மக்களின் குலதெய்வமான ஹெத்தையம்மன் திருவிழா உதகை அருகே உள்ள கொதுமுடி கிராமத்தில் கோலாகலமாகத் தொடங்கியது. இதையொட்டி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான படுகர் இன மக்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.
இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, ஹெத்தைக்காரர்கள் என அழைக்கப்படும் பக்தர்கள் 48 நாட்கள் கடுமையான விரதம் மேற்கொள்கின்றனர். பாரம்பரிய வெள்ளை உடை அணிந்து, புனிதச் செங்கோல் ஏந்தி, ஹெத்தையம்மனின் தாய்வீடாகக் கருதப்படும் கொதுமுடி கோயிலுக்கு பாதயாத்திரையாகச் சென்று வழிபடுகின்றனர்.
திருவிழாவையொட்டி படுகர் இன மக்கள் பாரம்பரிய இசைக்கருவிகளை இசைத்து, பாரம்பரிய நடனமாடியும் பாடல்களைப் பாடியும் உற்சாகமாகக் கொண்டாடினர். மேலும், ஹெத்தைக்காரர்கள் அருள்வாக்கு கூறும் நிகழ்ச்சியும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றன.
தற்போது கொதுமுடி கிராமத்தில் தொடங்கியுள்ள இந்தத் திருவிழா, தொடர்ந்து டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு படுகர் கிராமங்களிலும் நடைபெற உள்ளது. பூக்குண்டம் இறங்குதல் உள்ளிட்ட பாரம்பரிய நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. படுகர் மக்களின் பண்பாடு, கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் முக்கிய விழாவாக ஹெத்தையம்மன் திருவிழா திகழ்கிறது.
இதையும் படிங்க :சபரிமலைக்கு ஜனவரி 17 வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கம்.. முழு விவரம்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com