Sabarimala Special Buses: சபரிமலைக்கு ஜனவரி 17 வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
Sabarimala Special Buses: சபரிமலைக்கு ஜனவரி 17 வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Published on: November 19, 2026 at 12:13 pm
சென்னை, நவ.19, 2026: சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு திருவிழாவை முன்னிட்டு, தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து பம்பைக்கு ஜனவரி 17ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம், திருச்சி, மதுரை, புதுச்சேரி, கடலூர், ஓசூர் ஆகிய இடங்களில் இருந்து அதிநவீன சொகுசு மிதவைப் பேருந்துகள், குளிர்சாதனப் பேருந்துகள் மற்றும் குளிர்சாதன வசதியில்லாத இருக்கை, படுக்கை வசதி கொண்ட பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
சபரிமலை கோயில் நடை டிசம்பர் 27 முதல் டிசம்பர் 30ஆம் தேதி மாலை 5 மணி வரை சாத்தப்படுவதால், டிசம்பர் 26 முதல் 29ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படமாட்டாது. பக்தர்களின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் கூடுதல் பேருந்துகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பேருந்துகளுக்கு 60 நாள்களுக்கு முன்பே www.tnstc.in இணையதளம், TNSTC செயலி, வாட்ஸ்அப் எண் 94440 18898 மற்றும் முன்பதிவு மையங்கள் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். குழுவாகச் செல்லும் பக்தர்களுக்கு வாடகை அடிப்படையிலும் பேருந்து வசதி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : திருமாங்கல்யத் தேங்காய் ரூ.2.55 லட்சத்துக்கு ஏலம்; பெண் பக்தர் நெகிழ்ச்சி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com