PhD Student Arrest: சப்-இன்ஸ்பெக்டர் தாயிடம் 15 பவுன் நகை பறிக்கப்பட்ட வழக்கில், பி.எச்.டி. மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
PhD Student Arrest: சப்-இன்ஸ்பெக்டர் தாயிடம் 15 பவுன் நகை பறிக்கப்பட்ட வழக்கில், பி.எச்.டி. மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Published on: November 17, 2026 at 2:43 pm
உளூந்தூர்பேட்டை, நவ.17, 2026: உளுந்தூர்பேட்டை அருகே சி.பி.சி.ஐ.டி. சப்-இன்ஸ்பெக்டரின் தாயிடம் 15 பவுன் தங்க நகைகளைப் பறித்துச் சென்ற வழக்கில் பி.எச்.டி. மாணவரை போலீசார் கைது செய்தனர். செங்குறிச்சி சுங்கச்சாவடி பகுதியைச் சேர்ந்த சாந்தி (59) என்பவர் அரசு துணை ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்தாளுநராகப் பணியாற்றி வருகிறார். இவரது மகன் பிரசன்னா விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக உள்ளார்.
கடந்த 2-ம் தேதி மாலை பணி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்த சாந்தியை, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் வழிமறித்து பேசுவதுபோல் நடித்துள்ளார். பின்னர் திடீரென அவரது வாயில் ஸ்டிக்கரை ஒட்டி, கழுத்தில் அணிந்திருந்த 15 பவுன் தாலிச் சங்கிலி மற்றும் செயினைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றார்.
இதுகுறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகள் மற்றும் செல்போன் டவர் தகவல்களை ஆய்வு செய்தனர். இதன் அடிப்படையில் சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் (36) என்பவரைப் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் சென்னை மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு பி.எச்.டி. படித்து வருவது தெரியவந்தது.
மேலும், போதிய வருமானம் இல்லாததால் நகை பறிப்பில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரிடமிருந்து 12 பவுன் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க : தவறு செய்யும் தவெக எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை இல்லை.. அதிமுக குற்றச்சாட்டு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com