‘அக்வான்’ புயல் நாளை தீவிரம்; சென்னைக்கு நவ.18, 19-ல் ஆரஞ்சு அலர்ட்!

Cyclone Agwan: ‘அக்வான்’ புயல் செவ்வாய்க்கிழமை (நவ.17) தீவிரமடைகிறது; இந்நிலையில், சென்னைக்கு நவ.18, 19-ல் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Published on: November 16, 2026 at 1:49 pm

சென்னை, நவ.16, 2026: தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று (நவ.16) மாலை புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது நாளை (நவ.17) தீவிரப் புயலாகவும், நவம்பர் 19-ம் தேதி மிகத் தீவிரப் புயலாகவும் வலுப்பெறக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

தற்போது மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் இந்தப் புயல் சின்னம், ஆந்திரப் பிரதேச கடற்கரையை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் நவம்பர் 18, 19 ஆகிய தேதிகளில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், நவம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும், கடலில் உள்ள மீனவர்கள் பாதுகாப்பாகக் கரை திரும்புமாறும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதையும் படிங்க : வங்கக்கடலில் இன்று புயல் உருவாக வாய்ப்பு: 9 துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

ட்ரோன் ஆய்வறிக்கை வந்ததும் சட்டவிரோத குவாரி மீது நடவடிக்கை.. திருநெல்வேலி அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
Illegal Quarry Action

ட்ரோன் ஆய்வறிக்கை வந்ததும் சட்டவிரோத குவாரி மீது நடவடிக்கை.. திருநெல்வேலி அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com