Gang Rape Case 5 Arrested: மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Gang Rape Case 5 Arrested: மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Published on: November 14, 2026 at 12:49 pm
கன்னியாகுமரி, நவ.14, 2026: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே மனநலம் பாதிக்கப்பட்ட 23 வயது இளம்பெண்ணை 5 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் கடந்த 7 ஆண்டுகளாக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்ற இளம்பெண், தக்கலை அருகே உள்ள கீழ்கல்குறிச்சி பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த சிபின் (32) என்பவர் அவரிடம் பேச்சுக் கொடுத்து, தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து அவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து தனது நண்பர்களான மணிகண்டன், சிஜோ, ராபின், கிங்ஸ்லி ஆகிய 4 பேரையும் சிபின் வரவழைத்துள்ளார். பின்னர் 5 பேரும் சேர்ந்து இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, மறுநாள் காலையில் அவரை அப்பகுதியிலேயே விட்டுச் சென்றதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதற்கிடையே, இரவு முழுவதும் மகளைக் காணாமல் தேடிய குடும்பத்தினர், கீழ்கல்குறிச்சி பகுதியில் சோர்வடைந்த நிலையில் இருந்த அவரை மீட்டு விசாரித்தபோது சம்பவம் தெரியவந்தது. இதையடுத்து மார்த்தாண்டம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த சிபின், மணிகண்டன், சிஜோ, ராபின், கிங்ஸ்லி ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.
இதையும் படிங்க : தென்காசி நூலகத்தில் பரபரப்பு.. 2,200 ஏ.ஐ உருவாக்க நூல்கள் அகற்றம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com