Kulgam Terror Attack: காஷ்மீர் குல்காமில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 3 பேர் காயமுற்றனர்.
Kulgam Terror Attack: காஷ்மீர் குல்காமில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 3 பேர் காயமுற்றனர்.

Published on: November 13, 2026 at 1:07 pm
ஜம்மு, நவ.13, 2026: ஜம்மு காஷ்மீரின் தெற்குப் பகுதியில் உள்ள குல்காம் மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சோதனைச் சாவடி மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். நவம்பர் 11-ம் தேதி பிற்பகல் சுமார் 2.15 மணியளவில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம நபர்கள், மிர் பஜார் பகுதியில் பாதுகாப்புப் பணியில் இருந்த வீரர்களை நோக்கிச் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலில் மூன்று சிஆர்பிஎஃப் வீரர்கள் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த வீரர்கள் உடனடியாக அருகிலுள்ள அனந்த்நாக் மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் ஒருவருக்கு வயிற்றுப் பகுதியில் குண்டு காயம் ஏற்பட்டுள்ளதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்ற இருவருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன.
தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதியை பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கூடுதல் பாதுகாப்புப் படையினரும் குவிக்கப்பட்டுள்ள நிலையில், தாக்குதல் நடத்தியவர்களைப் பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க : ‘அப்பா செத்துட்டாங்க’.. சோனியாவிடம் பிரியங்கா காந்தி என்ன சொன்னார்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com