திருநங்கைகள் பாலினச் சான்றிதழ் பெறும் சட்டப் பிரிவுக்கு எதிர்ப்பு.. உச்சநீதிமன்றத்தில் மனு!

Supreme Court: திருநங்கைகள் பாலினச் சான்றிதழ் பெறும் சட்டப் பிரிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Published on: November 10, 2026 at 1:55 pm

புதுடெல்லி, நவ.10, 2026: திருநங்கைகள் தங்களது பாலின அடையாளத்தை மாற்றி அதிகாரப்பூர்வ ஆவணங்களில் பதிவு செய்வதற்கு வழிவகுக்கும் சட்டப் பிரிவுகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த Women’s Declaration International அமைப்பின் இந்தியப் பிரிவான WDI India இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளது.

திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் 2019-ன் பிரிவு 7 மற்றும் அதுதொடர்பான விதி 7 ஆகியவற்றை மனு கேள்விக்குள்ளாக்கியுள்ளது. அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு பாலின மாற்றத்திற்கான சான்றிதழ் பெற்று, பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட அரசு ஆவணங்களில் பாலின அடையாளத்தை மாற்றிக்கொள்ளும் நடைமுறைக்கு இந்தப் பிரிவுகள் வழிவகுப்பதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உயிரியல் ரீதியான பாலினத்தையும், தனிநபரின் பாலின அடையாளத்தையும் ஒன்றாகக் கருத முடியாது என்றும், பாலின அடையாள மாற்றத்திற்கான சட்ட அங்கீகாரம் பெண்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள இடஒதுக்கீடு, பாதுகாப்பு, விடுதிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் போன்ற உரிமைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஏற்கெனவே 2014-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க NALSA தீர்ப்பையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது. அந்தத் தீர்ப்பில், ஒருவர் தனது பாலின அடையாளத்தைத் தானே தீர்மானிக்கும் உரிமையை உச்சநீதிமன்றம் அங்கீகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, மத்திய அரசின் பதிலைக் கோரியுள்ளது. மேலும், திருநங்கைகள் உரிமைகள் தொடர்பான பிற வழக்குகளுடன் இந்த மனுவையும் இணைத்து விசாரிக்க முடிவு செய்துள்ளது. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் இதுவரை இறுதி தீர்ப்பு எதையும் வழங்கவில்லை.

இதையும் படிங்க : “மன்மோகன் சிங் ஆட்சியை நடத்தினார்; நான் கட்சியை வழிநடத்தினேன்”.. சோனியா காந்தி!

இந்திரா, ராஜீவ் மறைவுக்குப் பிறகும் இந்தியாவை விட்டு செல்ல விரும்பவில்லை.. சோனியா காந்தி உருக்கம்!
Sonia Gandhi on India

இந்திரா, ராஜீவ் மறைவுக்குப் பிறகும் இந்தியாவை விட்டு செல்ல விரும்பவில்லை.. சோனியா காந்தி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com