தீபாவளி கொண்டாடிய டொனால்ட் ட்ரம்ப்.. களை கட்டிய அமெரிக்கா!

Trump Diwali Celebration: அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் தீபாவளி கொண்டாட்டத்தில், இந்திய வம்சாவளி தொழிலதிபர்கள் பங்கேற்றனர்.

Published on: November 8, 2026 at 1:00 pm

நியூயார்க், நவ.8, 2026: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள் மற்றும் தலைமைச் செயல் அதிகாரிகளுடன் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினார். இந்த நிகழ்ச்சியில் டிரம்ப் பாரம்பரிய முறைப்படி அகல் விளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் வினய் மோகன் குவாத்ரா, பிரபல சமையல் கலைஞர் விகாஸ் கண்ணா, தொழிலதிபர் விஷால் கோண்டல், ஐபிஎம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அரவிந்த் கிருஷ்ணா, எஃப்.பி.ஐ. இயக்குநர் காஷ் படேல், தேசிய சுகாதார நிறுவன இயக்குநர் ஜெய் பட்டாச்சார்யா உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

அப்போது, இந்தியத் தொழிலதிபர் விஷால் கோண்டல், டிரம்ப்புக்கு துளசிதாசர் இயற்றிய ஹனுமான் சாலிசா புத்தகத்தைப் பரிசாக வழங்கினார். மேலும், அகல் விளக்குகள் ஏற்றப்பட்ட இந்த நிகழ்வு இந்தியா – அமெரிக்கா இடையிலான நட்புறவு வலுப்பெறவும், உலகில் அமைதி, வளம் மற்றும் நலன் பெருகவும் உதவ வேண்டும் எனத் தனது விருப்பத்தைப் பகிர்ந்துகொண்டார்.

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடும் பாரம்பரியம் முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் ஆட்சிக் காலத்தில் 2003ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2009ஆம் ஆண்டு அப்போதைய அதிபர் பராக் ஒபாமா வெள்ளை மாளிகையில் முதன்முறையாக அகல் விளக்கு ஏற்றி தீபாவளியைக் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : டிசம்பரில் தாயகம் திரும்புவேன்; மரணத்திற்கும் அஞ்சமாட்டேன்.. ஷேக் ஹசீனா!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com