அண்ணா பல்கலைக்கழகத்தில் ஹிரோஷிமா மையம் அமைக்கத் திட்டம்.. ஜப்பானில் வேலைவாய்ப்பு பெற பயிற்சி!

Anna University Hiroshima Centre: சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், மாணவர்களின் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில், வரும் மார்ச் மாதம் ஜப்பானின் ஹிரோஷிமா மையம் அமைக்கப்பட உள்ளது.

Published on: November 6, 2026 at 12:35 pm

சென்னை, நவ.6, 2026: சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், மாணவர்களின் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில், வரும் மார்ச் மாதம் ஜப்பானின் ஹிரோஷிமா மையம் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் மாணவர்கள் ஜப்பானிய நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

இந்த மையத்தின் மூலம் மாணவர்களுக்கு ஜப்பானிய மொழிப் பயிற்சி, அந்நாட்டின் கலாசாரம் மற்றும் பணிச்சூழல் குறித்த பயிற்சிகள் வழங்கப்படும். 2027ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு சேரும் மாணவர்கள், இந்தத் திட்டத்தின் முதல் பயனாளிகளாக இருப்பார்கள்.

முதல் மூன்று ஆண்டுகள் அண்ணா பல்கலைக்கழகத்திலேயே பயிற்சி அளிக்கப்படும். நான்காம் ஆண்டில், ஹிரோஷிமா பல்கலைக்கழகத் திட்டத்தின் கீழ் ஓராண்டு ஜப்பானில் தங்கி, நிறுவனங்களைப் பார்வையிடுதல், பயிற்சிப் பணிகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான நிகழ்வுகளில் பங்கேற்கும் வாய்ப்பு வழங்கப்படும்.

கடந்த மூன்று ஆண்டுகளில் ஜப்பானிய நிறுவனங்கள் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு 100-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளன. இதேபோல், எதிர்காலத்தில் ஜெர்மன் மற்றும் கொரிய மொழி, கலாசாரப் பயிற்சி மையங்களையும் அமைக்க பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.

இதையும் படிங்க : அக்னிபத் திட்டத்தில் அதிரடி மாற்றம்.. அக்னிவீரர்களுக்கு மேலும் 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com