மகளிர் டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை.. 14 பந்துகளில் அரைசதம் அடித்த பிரேமா ராவத்!

Prema Rawat 14-Ball Fifty: 14 பந்துகளில் அரைசதம் அடித்து பிரேமா ராவத் மகளிர் டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

Published on: November 4, 2026 at 1:49 pm

Updated on: November 4, 2026 at 1:50 pm

பெங்களூரு, நவ.4, 2026: மகளிர் டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக அரைசதம் அடித்து இந்திய வீராங்கனை பிரேமா ராவத் புதிய சாதனை படைத்துள்ளார். உத்தரகாண்ட் அணிக்காக விளையாடிய அவர், ஹைதராபாத் அணிக்கு எதிரான சீனியர் மகளிர் டி20 கோப்பைப் போட்டியில் வெறும் 14 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.

புனேவில் நடைபெற்ற இந்தப் போட்டியில், 24 வயதான பிரேமா ராவத் ஆட்டமிழக்காமல் 50 ரன்கள் எடுத்தார். இதில் 6 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் அடங்கும். அவரது அதிரடி ஆட்டத்தின் ஸ்ட்ரைக் ரேட் 357 ஆக இருந்தது.

இதற்கு முன்பு பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாத்திமா சனா, ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 15 பந்துகளில் அரைசதம் அடித்ததே மகளிர் டி20 கிரிக்கெட்டில் சாதனையாக இருந்தது. அந்தச் சாதனையை ஒரு பந்து வித்தியாசத்தில் முறியடித்து பிரேமா ராவத் புதிய வரலாறு படைத்துள்ளார்.

பிரேமா ராவின் அதிரடியால் உத்தரகாண்ட் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் குவித்தது. தொடர்ந்து பந்துவீச்சிலும் அசத்திய அவர், 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதனால் ஹைதராபாத் அணி 98 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தோல்வியடைந்தது; உத்தரகாண்ட் அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையும் படிங்க : இன்னும் எவ்வளவு கடினமாக உழைக்க வேண்டும்? சர்ஃபராஸ் கான்

டாம்மர் குத்துச்சண்டை போட்டி.. இந்தியாவுக்கு 14 பதக்கங்கள்.. பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தல்!
International Tammer Boxing

டாம்மர் குத்துச்சண்டை போட்டி.. இந்தியாவுக்கு 14 பதக்கங்கள்.. பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்து

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com