பி.வி சிந்து, லக்‌ஷயா சென் ஐரோப்பியத் தொடர்.. நிதியுதவியை நிறுத்திய இந்திய விளையாட்டு ஆணையம்!

PV Sindhu: சிந்து, லக்‌ஷயா சென் விளையாடிய ஐரோப்பியத் தொடரில் கடைசி நேரத்தில் நிதியுதவியை இந்திய விளையாட்டு ஆணையம் நிறுத்தியது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Published on: November 3, 2026 at 1:05 pm

புதுடெல்லி, நவ.3, 2026: இந்திய பேட்மிண்டன் நட்சத்திரங்களான பி.வி.சிந்து மற்றும் லக்‌ஷயா சென் ஆகியோர் ஜெர்மனியில் நடைபெற்ற ஹைலோ ஓபன் பேட்மிண்டன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தனர். ஆனால், இந்தத் தொடரில் பங்கேற்பதற்காகச் சென்ற இந்திய வீரர்களுக்கு கடைசி நேரத்தில் அரசு நிதியுதவி மறுக்கப்பட்ட தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இந்திய விளையாட்டு ஆணையமான SAI, பின்லாந்து, டென்மார்க், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் நடைபெற்ற நான்கு சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கச் சென்ற இந்திய அணிக்கான நிதியுதவியை நிறுத்தியுள்ளது. அக்டோபர் 6ஆம் தேதி பின்லாந்தில் தொடங்கிய போட்டிக்கு சில நாட்களுக்கு முன்புதான் வீரர்களுக்கு இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அதிருப்தி தெரிவித்துள்ள பி.வி.சிந்து, நிதியுதவி கிடைக்காதது தனக்கு அதிர்ச்சியளித்ததாகவும், இருப்பினும் போட்டிகளில் பங்கேற்பதே தனது முதன்மையான நோக்கமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனால், தனது சொந்தப் பணத்தையும், ஒலிம்பிக் கோல்ட் குவெஸ்ட் அமைப்பின் உதவியையும் பயன்படுத்தி போட்டிகளில் பங்கேற்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, இந்திய பேட்மிண்டன் சங்கம் (BAI), போட்டிகளுக்கான வீரர்கள் பட்டியலுடன் கூடிய நிதி ஒதுக்கீட்டு விண்ணப்பத்தை உரிய காலத்திற்குள் சமர்ப்பிக்காததே நிதியுதவி மறுக்கப்பட்டதற்குக் காரணம் என SAI அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். இந்த விவகாரத்தால் சில வீரர்கள் பயிற்சியாளர்கள் இல்லாமலும், பயணம், உணவு மற்றும் தங்குமிடச் செலவுகளைத் தாங்களே ஏற்றுக்கொண்டும் போட்டிகளில் பங்கேற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க : உலக தரவரிசையில் முன்னேறும் வைஷ்ணவி.. சென்னை ஓபன் போட்டிக்கு இலக்கு!

டாம்மர் குத்துச்சண்டை போட்டி.. இந்தியாவுக்கு 14 பதக்கங்கள்.. பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தல்!
International Tammer Boxing

டாம்மர் குத்துச்சண்டை போட்டி.. இந்தியாவுக்கு 14 பதக்கங்கள்.. பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்து

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com