Udhayanidhi Stalin | தமிழ்நாட்டின் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை (செப்.29, 2024) துணை முதலமைச்சராக பதவியேற்கிறார். இந்த நிலையில் தமிழக அமைச்சரவையிலும் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
மனோ தங்கராஜ் விடுவிப்பு
அமைச்சர்களாக இருந்த மனோ தங்கராஜ், கே.எஸ் மஸ்தான், ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும், செந்தில் பாலாஜி, கோவி செழியன், ராஜேந்திரன், எஸ்.எம் நாசர் ஆகியோருக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
பொன்முடிக்கு இலாகா மாற்றம்
இந்த நிலையில் உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடிக்கு வனத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த மெய்யநாதன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேலும், வனத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தன் ஆதி திராவிடர் நலத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அதேபோல், ஆதித் திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த ராஜ கண்ணப்பன், பால்வளத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு நிதி மற்றும் சுற்றுச்சூழல் துழந ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க
M K Stalin: சென்னையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது….
OS Manian: 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிட தயார்; அதே நேரம் திமுக தயாரா என கேள்வி எழுப்பி உள்ளார் ஓ எஸ் மணியன்….
M K Stalin pays tribute to Mahatma Gandhi: மதவெறியை மாய்ப்போம்; மகாத்மாவை போற்றுவோம் என தமிழக முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்….
MK Stalin: 1967-2011 வரை தி.மு.க ஆட்சியில் 43 அணைகள் கட்டப்பட்டுள்ளன என திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்….
MK Stalin: ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை தழுவி வெற்றியடையும் சிறந்த வீரருக்கு முன்னுரிமை அடிப்படையில் கால்நடை பராமரிப்புத் தறையில் அரசு வேலை வழங்கப்படும் என முதலமைச்சர் மு…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்