தனியார் பள்ளிகளில் அங்கீகார முறைகேடு வழக்கு: முன்னாள் திமுக எம்எல்ஏ முத்துக்குமார் சரண்!

Muthukkumar: தனியார் பள்ளிகள் அங்கீகார முறைகேடு வழக்கில், முன்னாள் திமுக எம்எல்ஏ முத்துக்குமார் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

Published on: October 30, 2026 at 1:56 pm

சென்னை, அக்.30, 2026: தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்ததாக எழுந்துள்ள ரூ.100 கோடிக்கும் அதிகமான முறைகேடு வழக்கில், முன்னாள் திமுக எம்எல்ஏ முத்துக்குமார் சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார். அக்டோபர் 28ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அவரது முன்ஜாமீன் மனுவை நிராகரித்த நிலையில், அக்டோபர் 29ஆம் தேதி அவர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

விருத்தாசலம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான முத்துக்குமார், தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளிகளின் தரம் உயர்த்த அனுமதி உள்ளிட்ட அரசு ஒப்புதல்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தனியார் பள்ளிகள் சங்க நிர்வாகி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் உள்ளிட்டோர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை சென்னை பெருநகர காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு விசாரித்து வருகிறது.

முத்துக்குமாரை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், அவரை நவம்பர் 12ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டது. இதையடுத்து அவர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட உள்ளார். சிறையில் அவருக்கு முதல் வகுப்பு வசதிகள், தேவையான மருத்துவ சிகிச்சை மற்றும் சொந்த உடைகளைப் பயன்படுத்த அனுமதி வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க : கே.என். நேரு தொடர்புடைய 25 இடங்களில் ரெய்டு.. அடுத்து என்ன?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com