மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு.. 3 நாள்களில் 2.26 லட்சம் பேர் தரிசனம்!

Madurai Meenakshi Temple: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்பட்டது; கடந்த 3 நாள்களில் 2.26 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர்.

Published on: October 6, 2026 at 3:37 pm

மதுரை. அக்.6, 2026: மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் தொடர் விடுமுறை காரணமாக பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்துள்ளது. அண்மையில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து மண்டல பூஜைகள் அக்டோபர் 2ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், விடுமுறை நாட்களிலும் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். கடந்த 3 நாட்களில் மட்டும் சுமார் 2.26 லட்சம் பேர் சுவாமி தரிசனம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, மண்டல பூஜை நிறைவு நாளான அக்டோபர் 2ஆம் தேதி ஒரே நாளில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதனால் கோயில் வளாகம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொண்டனர். தொடர் விடுமுறை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் மதுரைக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் வருகை அதிகரித்ததால், கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும் பாதுகாப்பை உறுதி செய்யவும் கோயில் நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் பல்வேறு ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.

கிழக்கு மற்றும் மேற்கு கோபுர நுழைவாயில்கள் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு, வடக்கு மற்றும் தெற்கு கோபுரங்கள் வழியாக வெளியேறும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கும்பாபிஷேகத்துக்குப் பிறகும் பக்தர்கள் வருகையால் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கடந்த 3 நாள்களாக பக்தர்கள் வெள்ளத்தில் காணப்பட்டது.

இதையும் படிங்க : அசாமில் இருந்து வாங்கப்பட்ட 5 யானைகள்.. எந்தெந்த கோவிலுக்கு செல்கிறது தெரியுமா?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com