தந்தையாக பிரகாஷ் ராஜ், மகனாக டார்லிங் கிருஷ்ணா.. ‘ஃபாதர்’ வெளியீடு எப்போது?

Father: கன்னட நடிகர் டார்லிங் கிருஷ்ணா மற்றும் நடிகர் பிரகாஷ் ராஜ் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள ஃபாதர் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி வெளியாகியுள்ளது.

Published on: October 6, 2026 at 4:04 pm

Updated on: October 6, 2026 at 4:05 pm

சென்னை, அக்.6, 2026: கன்னட நடிகர் டார்லிங் கிருஷ்ணா மற்றும் நடிகர் பிரகாஷ் ராஜ் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள ஃபாதர் (Father) திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆர். சந்திரு தலைமையிலான ஆர்.சி. ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம், வரும் டிசம்பர் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ராஜ்மோகன் இயக்கியுள்ள இப்படத்தில் பிரகாஷ் ராஜ் தந்தையாகவும், டார்லிங் கிருஷ்ணா மகனாகவும் நடித்துள்ளனர்.

தந்தை–மகன் உறவை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படம், குடும்ப உறவுகள், உணர்வுப் போராட்டங்கள் மற்றும் தனிப்பட்ட முரண்பாடுகளை மையமாகக் கொண்ட உணர்ச்சிகரமான கதையாக உருவாகியுள்ளது. ஏற்கனவே வெளியான படத்தின் முதல் பார்வை மற்றும் டீசர் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, ரயில் நிலையத்தில் தனியாக இருக்கும் தந்தையை மகன் தேடிச் செல்லும் காட்சிகள், இருவருக்கும் இடையிலான உணர்வுப்பூர்வமான உறவை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன.

படத்தில் பிரகாஷ் ராஜ், டார்லிங் கிருஷ்ணாவுடன் அம்ருதா ஐயங்கார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் நாகபூஷணா, ரமேஷ் இந்திரா, அவினாஷ், ஹொன்னவள்ளி கிருஷ்ணா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் இடம்பெற்றுள்ளனர். ஒளிப்பதிவை சுக்னான் மேற்கொண்டுள்ள நிலையில், ரகுநாத் எல். படத்தொகுப்பு பணிகளை கவனித்துள்ளார். நகுல் அப்யங்கர் இசையமைத்துள்ளார்.

முதலில் அக்டோபர் வெளியீட்டை இலக்காகக் கொண்டிருந்த நிலையில், தற்போது படத்தின் வெளியீடு டிசம்பர் 4ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அனைத்து வயதினரையும், குறிப்பாக குடும்ப ரசிகர்களையும் கவரும் வகையில் படம் உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, ஃபாதர் திரைப்படத்தின் திரையரங்கு வெளியீட்டு உரிமையை மேக்கிஸ் (MacKee’s) நிறுவனம் பெற்றுள்ளது.

இதையும் படிங்க : டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்.. குழந்தைகள் கொண்டாடும் பகத் பாசில்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com