ஹெச்.டி.எஃப்.சி காலாண்டு கடன் வழங்கல் அதிகரிப்பு.. முழு விவரம்!

HDFC Records Strong Loan Growth : ஹெச்.டி.எஃப்.சி வங்கி 2026-ஆம் ஆண்டின் செப்டம்பர் காலாண்டில் சிறப்பான கடன் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

Published on: October 5, 2026 at 11:59 am

சென்னை, அக்.5, 2026: ஹெச்.டி.எஃப்.சி வங்கி 2026-ஆம் ஆண்டின் செப்டம்பர் காலாண்டில் சிறப்பான கடன் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. வங்கியின் காலாண்டு முடிவில் மொத்த கடன் வழங்கல் 16.3% உயர்ந்து ரூ.32.20 லட்சம் கோடியாகவும், நிர்வாகத்தின் கீழான கடன்கள் 15.3% உயர்ந்து ரூ.33.08 லட்சம் கோடியாகவும் அதிகரித்துள்ளன. இதேபோல், மொத்த வைப்புத் தொகை 18.8% உயர்ந்து ரூ.33.28 லட்சம் கோடியாகியுள்ளது.

இதற்கிடையே, ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் புதிய நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக அனுப் பாக்சி நியமிக்கப்பட்டுள்ளார். ரிசர்வ் வங்கியின் ஒப்புதலைத் தொடர்ந்து, அக்டோபர் 27ஆம் தேதி முதல் 3 ஆண்டுகளுக்கு அவர் பொறுப்பேற்க உள்ளார். ஹெச்.டி.எஃப்.சி வங்கிக்கு வெளியிலிருந்து நியமிக்கப்படும் முதல் தலைமைச் செயல் அதிகாரி என்ற பெருமையையும் அவர் பெறுகிறார்.

இந்த நிலையில், எம்கே குளோபல் ஃபைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் பங்குக்கு ‘Buy’ பரிந்துரையைத் தொடர்ந்து வழங்கியுள்ளது.
ஒரு பங்கின் இலக்கு விலையை ரூ.1,225 என நிர்ணயித்துள்ள அந்த நிறுவனம், தற்போதைய சந்தை விலையிலிருந்து சுமார் 70% வரை உயர வாய்ப்புள்ளதாக கணித்துள்ளது.

நிர்வாக நிலைத்தன்மை, வைப்பு மற்றும் கடன் வளர்ச்சி, கிளைகளின் செயல்திறன் மற்றும் டிஜிட்டல் வசதிகளை மேம்படுத்துதல் ஆகியவை அடுத்தகட்டத்தில் முக்கிய கவனம் பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க :செல்வ மகள் சேமிப்பு திட்டம், பி.பி.எஃப்.. புதிய வட்டி விகிதம் என்ன?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com