Sardar 2: கார்த்தி நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவான ‘சர்தார் 2’ திரைப்படம் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
Sardar 2: கார்த்தி நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவான ‘சர்தார் 2’ திரைப்படம் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

Published on: October 4, 2026 at 6:12 pm
Updated on: October 4, 2026 at 6:13 pm
சென்னை, அக்.4, 2026: கார்த்தி நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவான ‘சர்தார் 2’ திரைப்படம் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் ஓடிடியில் வெளியாகியுள்ளது. அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் இப்படம் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், 21 நாட்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகியுள்ளது.
‘சர்தார் 2’ படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். ரா உளவாளியான சர்தார் சந்திரபோஸ் மற்றும் இன்ஸ்பெக்டர் விஜய் பிரகாஷ் ஆகிய இரு கதாபாத்திரங்களில் அவர் நடித்துள்ளார். எஸ்.ஜே.சூர்யா, முகமது பாரி எனப்படும் ‘பிளாக் டாகர்’ என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன், யோகிபாபு, பாபு ஆண்டனி, நிழல்கள் ரவி, நாசர், ஆஷிஷ் வித்யார்த்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பிரின்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஐவி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படம் ஆக்ஷன் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. கடந்த காலத்தில் உளவாளி சர்தார் சந்தித்த சம்பவங்கள் ஒரு பகுதியாகவும், நிகழ்காலத்தில் அவரது மகன் இன்ஸ்பெக்டர் விஜய் எதிர்கொள்ளும் ‘பிளாக் டாகர்’ தொடர்பான சம்பவங்கள் மற்றொரு பகுதியாகவும் கதை நகர்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படத்தை ஓடிடியில் பார்க்கலாம்.
இதையும் படிங்க : தனுஷ்- மம்முட்டி படம்.. ஓம் எப்போது வெளியீடு.. வெளியான தகவல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com